‘அதுல்யா’ – ‘சாகரிகா’ இடையிலான பொறாமைமிகுந்த உரையாடல் சிறப்பு. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் பெண்கள் இப்படித்தான் போல. ‘சாகரிகா’ – ‘ஷில்பா’ உரையாடல்களைக் கட்டமைத்தமைக்காகவே எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களுக்குப் ‘பெண்ணியச் சூனியவாதி’ எனும் பட்டத்தை வழங்கலாம். இந்த எழுத்தாளருக்குப் பெண்ணால்தான் தீங்கு என்பது இவர் பிறக்கும்போதே எழுதப்பட்டுவிட்டதுபோலும். கோவிந்தசாமியின் தேர்வறைக் ‘காண்டம்’ மிக அற்புதம். ‘கபடவேடதாரி’ நாவல் நிலத்துக்கும் வானத்துக்குமாகக் குதித்தபடியே இருக்கிறது. இந்த நாவலில், இன்னும் சில ‘அதுல்யா’க்களை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த எழுத்தாளரின் ஆழ்மனது அறியும் என்றே நான் நினைக்கிறேன்.