செகண்ட் ரேங்க்

அவன் ஒரு கவிதை எழுதினான். அவள் அது நன்றாக இருப்பதாகச் சொன்னாள். அவன் சிறிதாக தாடி வைத்துக்கொண்டான். அவள் அது அவன் முகத்துக்கு எடுப்பாக இருப்பதாகத் தெரிவித்தாள். அவன் ஒரு ஏழைப் பிச்சைக்காரனுக்கு மதிய உணவு வாங்கித் தந்ததை அவள் கண்டாள். அவனுக்கு நல்ல மனம் என்று சொன்னாள். அவனுக்கு அது திருப்தியாக இருந்தது. பிறகொரு நாள் உடன் படித்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதை அடுத்துத் தற்கொலை செய்துகொள்ளச் சென்றபோது அவன் தடுத்து, ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லி, அவனை ஊக்குவித்து அடுத்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறச் செய்தான். அவள் வழக்கத்தினும் நெருங்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு பாராட்டினாள். அவனுக்கு அது பிடித்தது. அவனும் அவளும் நிறையப் பேசினார்கள். அவனோடு இருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனும் அவளும் நிறைய நேரம் ஒன்றாகவே செலவிட்டார்கள். அவனது நண்பர்கள் பலருக்கு அது பொறாமையளித்தது. அவள் ஒருவனைக் காதலிப்பதாக அவனிடம் சொன்னாள். அவன் வாழ்த்துச் சொன்னான். பிறகு அவர்கள் காதல் புரியத் தோதான இடங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்தான். மேலும் பிறகு இரு வீட்டாரிடமும் பேசி அவர்கள் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தான். அவள் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். மேலும் மேலும் பிறகு அவளுக்கு தினமும் வாட்சப்பில் பொன்மொழியுடன் கூடிய குட் மார்னிங் அனுப்ப ஆரம்பித்தான்.

எப்பிட்றா என்று அவனது நண்பர்கள் கேட்டார்கள். That’s the power of second rank student என்று அவன் சொன்னான்.

Share

2 comments

  • அந்த பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு பேர் தான் பெஸ்ட்டீ… அந்த husband நிலைமை இன்னும் மோசம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி