செம்மொழிப்ரியா பிரிந்து சென்றதில், நிழல் சற்று நேரம் புலம்பலுக்கு ஆளாகிறது. ஒரு நாள் காதல் என்றாலும் அந்தக் காதலின் வலிக்குச் சாராயத்தை நாடுகிறது நிழல். அங்கே நம் கோவிந்தசாமியும் தன் புண்பட்ட நெஞ்சை ஆல்கஹால் ஊற்றி ஆற்றி கொண்டிருக்கிறான். இருவருமாய் தங்கள் கஷ்டங்களை மிக்சரோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
இதற்கிடையில் வெண்பலகையில் ஒரு பெண், மனுஷின் கவிதைகளைத் தொட்டு கொண்டு குடிப்பதாக வந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு, கோவிந்தசாமி மனசாட்சியே இல்லாமல் அவனது கவிதைகளை உயர்த்தி பேசுகிறான்.
மீண்டும் சாகரிகாவுடன் இணைவதற்கு ஷில்பா தான் தடையெனக் கூறும் நிழல், அவளைப் பிரச்சனையிலிருந்து விலக்க, சூனியனிடம் உதவி கேட்கலாம் எனவும் யோசனை கூறுகிறது. அதை மறுக்கும் கோவிந்தசாமியிடம், நிழல் தானும் ஒரு சூனியன் என ஒரு குண்டைத் தூக்கி போடுகிறது. என்னால் நம்ப முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!