கோவிந்தசாமியும் அவனது நிழலும் மறுபடியும் அந்த ஒயின்ஷாப்பில் சந்திக்கிறார்கள். அந்த ஒயின்ஷாப்பின் பெயரில் ஏதாவது குறியீடு இருக்கிறதா எனத் தெரியவில்லை.
ஆனால் குறியீடு எதுவும் இல்லாமல் நேரடியாக ஒரு விஷயம் கோவிந்தசாமி சொல்வதாக இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
“நான் குடிக்கிறேனே தவிர வேறு தப்புத்தண்டாவுக்கும் போனதே இல்லை. வேலைத் தூக்கிக் கொண்டு அலைந்ததும் இல்லை. காலை விரித்துக் கொண்டு கிடந்ததும் இல்லை”
“என்னை ஏமாற்றிய என் காதலிக்கும் நான் ஏமாற்றிய என் சாகரிகாவுக்கும் எனது சமர்ப்பணம் ” என சொல்லி கோவிந்தசாமியுடன் சுயமி எடுத்து பகிரும் நிழலை மன்னித்து முத்தம் கொடுத்து மொத்தமாக அடிமையாக்க நினைக்கிறாள் சாகரிகா .
“நீல நகரத்தில் நிஜங்களை விட நிழல்களுடன் உறவு கொள்வதையும் யுத்தம் செய்வதையுமே அனைவரும் விரும்புகின்றனர்” என்கிறது நிழல்.
அத்தியாயத்தின் இறுதியில் திராவிடத் தாரகை சாகரிகா கையில் வேலை பிடித்துக் கொண்டு வெண்பலகையில் தோன்றுவதாய் வெளிவந்த படத்தை பார்த்து அவளே அதிர்கிறாள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.