முதல் அத்தியாயம் தொடங்கும்போதே சூனியனின் ஃப்ளாஷ்பேக்கை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. அதை பத்தாவது அத்தியாயத்தில்தான் சொல்லவேண்டும் என முடிவுசெய்து
வைத்திருந்தார் போலிருக்கிறது.
சூனியனுக்கு ஒரு டாஸ்க். அந்த டாஸ்க் கடவுள் மற்றும் மனித குலத்துக்கு எதிரானது. நமக்கு மிகவும் தெரிந்த ஒரு இடத்தில் அந்த டாஸ்க் முடிக்கப்பட திட்டமிடப்படுகிறது. அந்த டாஸ்க்கைப் பற்றி அவன் சொல்லச் சொல்ல அதைப் பற்றிய விவரம் நமக்குத் தெரியவருகிறது என்றாலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சிலருக்காக இன்னும் கூடுதல் விவரங்களை அடுக்குகிறார்.
அந்த விவரங்கள் அந்த நாட்டினுடைய அரசியைப் பற்றியது. ஒருசில வரிகளிலேயே அந்த அரசியைப் பற்றிய முழுமையான பிம்பத்தை நம் மனதில் பதியவைத்து விடுகிறார்.
நீல நகரம், குனியர்கள் உலகம் என்று கற்பனை உலகங்களைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் போதே நமக்கு நன்கு தெரிந்த மனிதர்களையும், இடங்களையும், சூழல்களையும் ஆங்காங்கே சொல்லிவிட்டுப் போகிறார் ஆசிரியர்.
கோவிந்தசாமியைப்பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும்போலிருக்கிறது. காத்திருப்போம்.