கபடவேடதாரியில் நீலநகரம் ஒன்று உருவானதிலிருந்தே சிரிப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை வாசிப்பவர்களை சலிப்படையாது சிரிக்க வைத்தே கூட்டி செல்கிறார் பாரா. அதிலும் அந்த கிரைப் வாட்டர் அல்டிமேட். கோவிந்தசாமியின் மடத்தனத்தை ஒவ்வொரு அத்தியாயம் நகர நகர மிகுதியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. இப்பிடி பட்டவனை சாகரிகா வெறுக்காமல் என்ன செய்வாள். அவள் அந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கிய போது கோவிந்தசாமியின் மீது எனக்கு கொஞ்சம் பரிதாபம் மட்டும் மிஞ்சியிருந்தது. ஆனால் இப்பொழுது அதுவும் இல்லை. ஆனால் சாகரிகா தற்பொழுது நீலநகரத்தில் வெண்பலகையில் எழுதிவருபதை கோவிந்தசாமி அறிந்தால் என்ன நடக்கும், அந்த மடையன் என்ன செய்வான் இதெல்லாம் பார்ப்பதற்கு வெகு ஆவலாக இருக்கிறது.