கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 14)

பா.ரா.வோடு மீண்டும் சூனியனுக்கு பிணக்கு. ஆவேசத்தைக் கொட்டிவிட்டு அமைதிப்படும் சூனியன் போகிற போக்கில் ”எனது ஆனந்த தாண்டவத்தில் தரிசிப்பீர்கள்” என் சொல்லிச் செல்வதில் பின்னொரு விறுவிறுப்பு காத்திருப்பது தெரிகிறது.
கோவிந்தசாமி சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டதை அவனுடைய நிழலுக்குச் சொல்லும் சூனியன் அவன் பதிந்திருந்த மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி கவிதையை வாசித்துக் காட்டுகிறான். வாசிப்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பேக் ஐ.டி.யை உருவாக்கி அதில் கவிதையை பதிவாக்கியிருப்பதிலும், கவிதையை ஜெய்ஸ்ரீராம் என முடித்திருப்பதிலும் கோவிந்தசாமி இன்னும் சங்கியாகவே நீடிக்கிறான்.
சூனியனும் தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கிறான். முகக்கொட்டகையில் இருந்து 120 முகங்களை சேகரித்து அதை கோவிந்தசாமியின் நிழல் வழியாக வெண்பலகையில் ஆக்கிரமிக்க வைப்பதோடு, சாகரிகா கோவிந்தசாமி மீது அபாண்டமாக சுமத்தும் பழிக்கு மறுப்பு எழுதி அதை 120 பேர் மூலமும் பகிரவும் வைக்கிறான். சூனியன் என்றாலே பிரமாண்டம் தானே!
கோவிந்தசாமியின் வருத்தக் கவிதைக்கு வரும் முதல் கமெண்டுக்கு அவன் நிழல் அழுகிறது. எனக்கோ, அந்த கமெண்டை அப்படியே பா.ரா.வுக்கு மடை மாற்றத் தோன்றுகிறது.
Share