அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 10)

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண இருபக்க வாதங்களையும் நியாயங்களையும் கேட்பது தானே சரியாக இருக்கும். அதனால், நம் சூனியன் சாகரிகாவின் மூளைக்குள்ளும் சென்று பார்ப்பதென முடிவு செய்கிறான். எனக்கும் சாகரிகாவின் மூளைக்குள் என்ன தான் இருக்கிறது என்பதை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது.
சூனியனின் தண்டனைக்கான காரணத்தை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறோம். 20 இலட்சம் மக்களைக் கொல்ல வேண்டுமென்ற தனது டாஸ்க்கை முடித்தானா என்பதை அடுத்த அத்தியாயத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
விதி எழுதும் கூட்டம் ஒன்று இருக்கிறது – ஒரே வரியில் இவ்வளவு ஆழமான கருத்தை முன் வைத்திருக்கிறார் எழுத்தாளர். அரசியலை இவ்வளவு எள்ளலோடு சுவாரசியமாய் கடத்திவிடும் வரிகள் அபாரம்.
சூனியன் அவன் பணியில் வென்றானா ? அவனின் தண்டனைக்கான காரணம் என்னவாக இருக்கும்?
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி