இந்த அத்தியாயத்தில் இரண்டு முக்கியமான விடயங்களைப் பார்க்கிறோம், ஒன்று சூனியன் தனக்கு கொடுக்கப்பட்டப் பணியில் எவ்வாறு தோற்றான் என்பதை தெரிந்து கொள்கிறோம். இரண்டு முகநூலில் நடக்கும், தினசரி நாம் கடந்து போகும் fake-id களையும் எவ்வாறு கதையில் பிணைத்து இருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம்.
இந்த அத்தியாயம் வெகு சுவாரசியமாய் அமைக்கப் பெற்றிருக்கிறது. அரசியின்(யாரென்று கணித்திருப்பீர்கள்) வருகை, அரசி வருகிறார் என்ற விடயம் வெளியே கசிய காரணம், விழாவுக்கு வருகை தந்த மாந்தர்கள், அவர்களை கட்டுப்படுத்த முயலும் காவலர்கள், தன் பணியில் தோல்வியைத் தழுவும் சூனியன் எனக் கதை ஒரு பக்கம் விறுவிறுப்பாய் நகர்கிறது.
இன்னொருப் பக்கம், வெண்பலகைக் கொண்டு முகநூலுலில் நடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார், பெண்களின் பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பு அதீதமாக இருக்கிறது என்பதையும், fake-id களில் உலா வரும் மக்கள், தங்களின் உண்மையான பக்கத்தை விட பொய்யான பக்கத்தில் அறிவு கூர்ந்து காணப்படுவதும், உண்மை எது பொய் எது என ஆராயாமல் ஹிட் ஆகும் பதிவுகள் என கதையின் மூலமாகவே கருத்துகளை முன் வைக்கிறார் எழுத்தாளர்.
கோவிந்தசாமிக்காக சூனியன் வெண்பலகையில் பதிவு செய்ததற்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்!
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!