புதிய புத்தகங்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்

அறிவிப்பு, புத்தகம், பூனைக்கதை, முன் வெளியீட்டுத் திட்டம்

ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய மூன்று நூல்களை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

1. பூனைக்கதை – புதிய நாவல்
2. ருசியியல் – தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு
3. சிமிழ்க்கடல் – பூனைக்கதைக்கு முன்பு நான் எழுதிய எட்டு நாவல்களின் பெருந்தொகுப்பு.

இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1500. இதற்கு கிழக்கு முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

டிசம்பர் 25ம் தேதிக்குள் இவற்றுக்கு முன்பதிவு செய்தால் விலை ரூ. 1000 மட்டும். பதிவு செய்வோருக்கு ஜனவரி 7-10 தேதிகளுக்குள் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

மூன்று நூல்களையும் தனித்தனியாகவும் முன்பதிவு செய்யலாம்.

பூனைக்கதை நாவல் ரூ. 350. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதன் விலை ரூ. 250 மட்டும்.

சிமிழ்க்கடல் பெருந்தொகுதியின் விலை ரூ. 1000. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இதனை ரூ. 750க்குப் பெறலாம்.

ருசியியல் ரூ. 150. இது முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 100க்குக் கிடைக்கும்.

முன்பதிவு செய்வதற்கான சுட்டிகள்:

சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack) Pre Order – முன்பதிவுச் சுட்டி 

பூனைக்கதை : முன்பதிவுச் சுட்டி

சிமிழ்க்கடல் : முன்பதிவுச் சுட்டி

ருசியியல் : முன்பதிவுச் சுட்டி

முன்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு nhm-shop@nhm.in என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்க.