எட்டு நாவல்கள் அடங்கிய பெருந்தொகுதி இது. ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டது.
- அலை உறங்கும் கடல்
- அலகிலா விளையாட்டு
- புவியிலோரிடம்
- ரெண்டு
- கொசு
- கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
- தூணிலும் இருப்பான்
- மெல்லினம்
இந்த எட்டு நாவல்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இவற்றுள் அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம் இரண்டும் நேரடி நாவல்களாக எழுதப்பட்டவை. [ அலகிலா விளையாட்டு பின்பு இலக்கியப் பீடம் இதழில் தொடராக வெளிவந்தது.] ரெண்டு, குங்குமத்தில் வெளிவந்தது. தூணிலும் இருப்பான், தினமலரில். மற்ற மூன்றும் கல்கியில் வெளியானவை.
வாழ்வின் மிக எளிய கணங்களே சாமானியர்களுக்கான கலையாகின்றன. இந்நாவல்கள் அக்கணங்களை சாசுவதப்படுத்தும் முயற்சியாக எழுதப்பட்டவையே. வெளியான காலத்தில் இவை பெருவாரியான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டவை. தனித்தனி நூல்களாக வெளிவந்த இவை, அவ்வப்போது பதிப்பில் இல்லாமல் இருந்திருக்கின்றன. தமிழ்ச் சூழலில் இது ஒரு பிரச்னைதான். வேறு வழியில்லை.
இந்த ஆண்டு பூனைக்கதை என்னும் எனது புதிய நாவலொன்று வெளிவருகிறது. அது வெளிவரும் நேரம் முந்தைய இந்த எட்டு நாவல்களும் முழுமையான ஒரே தொகுதியாகச் சேர்ந்து வெளிவருவது வாசக சௌகரியம் கருதிச் செய்யப்படும் ஓர் ஏற்பாடு.
நூல் முகப்பு வடிவமைப்பு: சித்ரன் ரகுநாத்