அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 12)

இந்த அத்தியாயத்தில் ஷில்பா என்னும் புதிய கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. சாகரிகாவின் தோழியான ஷில்பா நம் கோவிந்தசாமியை எதேர்ச்சியாக சந்திக்க நேர்கிறது. அவளின் உதவியோடு நீலநகரத்து குடியுரிமை வாங்குகிறான். இருந்தாலும், சூனியன் கோவிந்தசாமியின் நிழலைக் கொண்டு முன்பே அவன் பெயரில் நீலநகரத்தின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதால், வெண்பலகை கோவிந்தசாமியின் எண்ணை ஏற்க மறுக்கிறது.
சூனியனைத் தேடி இன்னும் பல சூனியர்கள் நீல நகரில் நுழைய இருக்கிறார்கள் போலவும் தெரிகிறது.
எனக்கு ஷில்பா மீது சற்று சந்தேகமாக இருக்கிறது. அவள் நீல நகர வாசியல்ல என்று கூறுகிறாள், அனால் அந்த மொழியை எப்படிக் கற்றுக்கொண்டாள் எனத் தெரியவில்லை. ‘இதோ வருகிறேன்’ என கோவிந்தசாமியிடம் சொல்லிவிட்டு ஷில்பா எங்கு சென்றாள் என்றும் குழப்பமாக இருக்கிறது. நீல நகரத்து பிரஜையாக மாறிய கோவிந்தசாமிக்கு மட்டும் ஏன் கூடுதல் மாற்றங்கள் எனவும் தெரியவில்லை.
இப்படி பல கேள்விகளுடன் இந்த அத்தியாயம் முடிகிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி