பாரா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாகக் ‘கபடவேடதாரி’ என்று பெயர் வைத்திருக்கலாம். மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். தன்னை நிலை நிறுத்தச் சூனியனுக்குச் சூனியனாக இந்தப் பாரா உள்ளார்.
நீல நகரத்திற்குப் பாராவை அழைத்து வந்தது சாகரிகா என்பதை உறுதிபட அறிந்து கொள்கிறான் சூனியன். அவளது நேர்த்தியாகச் சொல்லிற்குக் காரணமான பாராவையும் அறிந்து கொள்கிறான். சூனியன் சாகரிகா, பாராவின் மீதுள்ள கோபத்தை, “அவளுக்கு இருந்த பிம்பத்துக்குச் சற்றும் பொருந்தாது அது” என்ற வார்த்தையில் உமிழ்கிறான்.
ஒன்றை மறக்க வேண்டுமென்றால் இன்னொன்று மனத்தினில் உருவாக வேண்டும். எனவே, இந்தச் சாகரிகாவால் கோவிந்தாமி பற்றிய எண்ணத்தை அழிக்க முடியாத காரணத்தினால் ‘கபடவேடதாரி’யான பாராவை நாடுகிறாள். இந்த வாய்ப்பைச் சரியாகவே பாரா பயன்படுத்தியுள்ளார். வார்த்தை ஜாலத்தில் சிறந்தவர் அல்லவா, அவர்?.
இந்தக் கூறுகெட்ட குப்பை மனது சில நேரம் விரும்பியவரை வெறுக்கும். வெறுப்பவரை விரும்பும். ராட்டினம் போல நிலை கொள்ளாது. அதுபோல் கோவிந்தசாமியைப் பற்றிச் சுற்றிக் கொண்டிருக்கிற எண்ணத்தையும்
அருமையாக
அழித்துக் கொண்டே இருக்கிறாள். சாகரிகாவின் எண்ணத்தில் பாராவின் சொல்லே ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் கதையானது இனி யுத்த களமாக மாறுமோ?