நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவின் சில காட்சிகளை ஹரன் பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு கேமரா அல்லது வீடியோ ரெக்கார்டர் மட்டும் கிடைத்துவிட்டால் மனிதர்களுக்குத்தான் எப்படி கலையுணர்வு பொங்கிப் பீறிட்டுவிடுகிறது!
இருப்பினும் இச்சரித்திரப் பதிவைச் சாத்தியமாக்கியதன்மூலம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட பிரசன்னாவுக்கு வேறு வழியில்லாமல் நன்றி சொல்லிக் கீழே ப்டம் காட்டுகிறேன். 😉
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
ஒலி சரியாக இல்லை. அதை விடுங்கள். கூட்டத்தைப் பார்த்ததும், யாருமே இல்லாத கடையில் யாருக்குய்யா டீ ஆத்தறீங்க என்ற விவேக் வசனம் ஞாபகம் வந்தது 🙂
ஜ்யோவ், கடையில் நிறையவே ஆள் இருந்தார்கள். ஒளிப்பதிவாளர் சொதப்பியிருக்கிறார்;-) ஆளில்லாத ஏரியாவில் மட்டுமே கேமராவை நகர்த்தி துரோகம் செய்திருக்கிறார்.
எளிமையான பேச்சு; குட்டிக் கதை இல்லாமல், மேடை மசாலா இல்லாமல், நேர்மையான உரை. பன்ச் டயலாக் போட்டிருக்கலாம் 🙂
நல்ல எடிட்டிங் (கோலாட்டத்திற்கு கத்திரி போட்டது கண்டிக்கத்தக்கது)
வாழ்த்துக்கள்.ரசித்தேன் .ஏக்கமாகவே இருக்கு,நெய்வேலியில் நாங்கள் இருந்தக் காலத்தில் இவை இல்லையே என்று