நாவலின் இடைவெட்டாகப் பாரா என்ற கதைசொல்லி உள்ளே நுழைந்து வாசகரைக் குழப்பியதைக் குறித்துச் சூனியன் கவலைகொள்கிறான்.
படைத்தல், அழித்தல் குறித்த தன்னுடைய கருத்தாக்கங்களை வாசகரோடு பகிர்ந்துகொள்கிறான் சூனியன். அவன் கோவிந்தசாமியின் நிழலிடம் பலவாறாகப் பேசி, அவனைச் சமாதானம் செய்து, அவனைத் தன்வசப்படுத்திக் கொள்கிறான் சூனியன்.
கோவிந்தசாமியின் பதிவுகளைப் படித்து இருவரும் திகைக்கிறார்கள். கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியைப் போலவே முட்டாளாக இருப்பதைக் கண்டு சூனியன் சினக்கிறான். நிஜத்தின் பிரதிநிதிதானே நிழல்!
வழக்கம்போல இந்தப் பகுதியிலும் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் மிகுபுனைவுத் திறன் மிளிர்ந்துள்ளது.