அனுபவம்

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 22)

கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியின் குளோனிங் என்றாலும் கோவிந்தசாமி அல்ல என்பதை உணர்த்த முற்படுகிறது. நிழலானது தான் தனியாள் என்பதை உணர்கிறது. உணர்த்துகிறது. கோவிந்தசாமி கொண்ட காதலின் எச்சமானது நிழலுக்குள் உள்ளதால் அது சாகரிகாவைக் காதலிக்கிறது. பல்லாண்டு காலங்கள் கோவிந்தசாமிக்குள் வாழ்ந்ததால் நிழலானது அவனின் எண்ணங்களைத் தன்னிலிருந்து உதிர்க்கவும் போராடுகிறது. ஷில்பா நிழலுக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறாள். சாகரிகாவிடம் தனக்கும் கோவிந்தசாமிக்குமான உறவு அறுபட்டு விட்டு என்பதை அவளிடம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. தான் தனித்துவமானவன் என்பதையும் நிழலின் பேச்சு உணர்த்துகிறது. ஆனால் நெடுஞ்சாண்கிடையாக அவளது கால்களை நோக்கி விழுந்த போது கோவிந்தசாமிக்கும் நிழலுக்குமான பந்தம் இன்னும் அறுபடவில்லை என்பதை உணர இயல்கிறது. இவர்களின் கூட்டணியால் வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி