மலிவு விலையில் மாயவலை

சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.

பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.

ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் குறைந்தது இன்னும் 15 புத்தகங்களாவது மறுபதிப்பில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒரு புதிய புத்தகமும் வெளியாகக் கூடும். அதைப் பற்றிய விவரங்களைப் பின்னர் தருகிறேன்.

மேற்கண்ட புத்தகங்களைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு நீங்கள் mathinilayambooks@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அல்லது 044-28111506 என்னும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம்.

ஒரு முக்கியமான விஷயம். எனது மாயவலையை வாசிக்க விரும்பிய பல வாசகர்கள் அதன் விலை காரணமாகவே (முதலில் 750. பிறகு 900) பயந்து ஓடிய காட்சியைப் புத்தகக் கண்காட்சிகளில் நேரில் பார்த்திருக்கிறேன். 1200 பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகத்தை அதைக்காட்டிலும் குறைந்த விலையில் எப்படிக் கொண்டுவருவது என்று அப்போது தெரியவில்லை. அதையும் மீறி அந்நூல் நன்றாகவே விற்பனையானது.

இப்போது இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்பை 500 ரூபாய்க்குள் [இதைக்கூட மலிவுப் பதிப்பு என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது.] கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் குறைந்த அளவு பிரதிகள் மட்டுமே [600 பிரதிகள்] அச்சிடப்படும். புத்தகம் வேண்டும் வாசகர்கள் இப்போதே மதிநிலையத்தில் முன்பதிவு செய்து கொண்டால் ஜனவரியில் புத்தகம் கிடைப்பதில் சிரமம் இராது. முன்பதிவு செய்வோர் எண்ணிக்கையைப் பொறுத்து பதிப்பாளர் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கூடும்.

சரியான விலை விவரம் தீர்மானமானபிறகு சொல்கிறேன். ஆனால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி துண்டு போட்டுவைக்கத் தடையில்லை.

Share

5 comments

 • எனக்கு வேணுங்க ஆனா நீங்க வாங்கி வச்சுருந்து எனக்கு கொடுங்க

 • மிகவும் இனிப்பான செய்தி. 500 என்பது என்னை பொறுத்தவரை மிக் குறைவான விலைதான். மாயவலை போன்ற ஒரு புத்தகத்தின் மதிப்பு தெரிந்தவர்கள் இதை அப்படித்தான் சொல்வார்கள்.

 • 200 அட்டைகள் மைலார் உறைகள் அடங்கிய காம்போ பேக்கின் விலை சுமார் முப்பது டாலர்கள். இந்திய மதிப்புப்படி ஒரு அட்டை மற்றும் உறைக்கு சுமார் எட்டு ரூபாய் ஆகிறது! இந்தியாவில் இது கிடைப்பதில்லை, மொத்தமாக இறக்குமதி செய்து, இரண்டு மடங்கு விலையில் விற்றால் நன்றாக கல்லா கட்டலாம்! 😉 காமிக்ஸ் சுய / குடிசைத் தொழில் ஆர்வலர்கள், இதற்காக என்னென்ன வஸ்துகளை இறக்குமதி செய்யலாம் என்ற பல்பை எரிய விட இந்த லிங்கை அமுக்கவும்! அட்டைதானே என்று லேசாக எண்ணி இரண்டு காம்போ செட்கள் வாங்கினேன். ஆனால், சரியான வெயிட் – லக்கேஜில் கணிசமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது! நான் வாங்கிய Current Size கவர்களில் பழைய ராணி, லயன் / முத்து பழைய பெரிய(!) சைஸ், பார்வதி சித்திரக்கதை போன்ற புத்தகங்களை தாரளாமாக வைக்கலாம். ஆனால், இப்போது புதிதாய் வெளிவரும் லயன் / முத்து இதழ்களை வைக்க முடியாது. அதற்கு Magazine ரக கவர்களை வாங்க வேண்டும். அடுத்த தடவை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்! அட்டை என்றதும் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது – இந்த வருடத்தில் வெளிவந்த மகா கேவலமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும்! மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது! ஆனால், பின்னட்டை சூப்பர்! நல்ல வேளையாக டிராப்ட் கவரில் இருந்த “புத்தம் புதிய சாகஸங்கள்” என்ற காமெடியான tagline-ஐ ஆசிரியர் எடுத்து விட்டார்!

 • நல்ல முயற்சி அண்ணா…
  நான் ரிப்போர்ட்டரில் படித்தது…
  வெகு நாள் ஆசை..
  இப்போதே துண்ட போட்டு வைக்கிறேன்..
  நன்றி அண்ணா..

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter