கறை நல்லது.

இன்று காலை என் பழைய நண்பர் ஒருவரும் புதிய நண்பர் ஒருவரும் அரை மணி நேர இடைவெளியில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். இருவரும் தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரே எல்.ஆர். சுவாமி மண்டபத்தில் நடைபெறும் கிழக்கு புத்தகத் திருவிழாவில் இருந்தே அழைத்திருந்தார்கள்.

வாங்கிய புத்தகங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, முயற்சியைப் பாராட்டிவிட்டு கையோடு ஒரு கேள்வி கேட்டார்கள். அதெப்படி ஐந்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் புத்தகங்களைத் தருகிறீர்கள்? இவையெல்லாம் விற்காத புத்தகங்களா?

நான் பதிலுக்கு அவர்கள் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன என்று கேட்டேன். டாலர் தேசம், பிரபாகரன் ஒரு வாழ்க்கை, சே குவேரா, அள்ள அள்ளப் பணம் போன்ற புத்தகங்கள் அந்தப் பட்டியலில் இருந்தன. இதை நான் சுட்டிக்காட்டியபோது, அதானே, எப்படி முடிகிறது, ஏன் செய்கிறீர்கள் என்றார்கள்.

பல ஊர்களில், பல இடங்களில், பல கண்காட்சிகளில் வைக்கப்பட்டு விற்காமல் திரும்பி வந்த பிரதிகளே பெரும்பாலும் இந்த அதிரடி சிறப்பு விற்பனைக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு சில புத்தகங்கள் கொஞ்சம் டேமேஜ் ஆனவை. பெரும்பாலும் அழுக்காகி, தூசு படிந்து, கறை படிந்து, கடைகளுக்கு இனி அனுப்ப முடியாத நிலையை அடைந்தவை. கண்காட்சிகளில் மேலே இருக்கும், முன்னால் இருக்கும் பிரதிகள் பெரும்பாலும் இப்படித்தான் ஆகும். அவைதான் வாசகர்களை உள்ளே அழைப்பவை. கட்டிப்போடுபவை. வாங்கவைப்பவை. ஆனால் அவற்றை எடுத்துவிட்டு அடுத்து இருக்கும் பிரதியைத்தான் வாசகர்கள் பெரும்பாலும் எடுப்பார்கள். இந்த சைக்காலஜி வெகு நாள் வரை எனக்குப் புரியவில்லை.

அப்புறம் புரிந்தது. எல்லா வாசகர்களுமே மேலே இருக்கும் பிரதி அழுக்கானவை என்றே பெரும்பாலும் கருதுகிறார்கள்.புத்தம் புதிதாக அப்போதுதான் உறை பிரித்து வைத்தாலும் இதே கதிதான்.  அதனாலேயே அவை மேலும் அழுக்காக விட்டுவிடுகிறார்கள்! டாலர் தேசம் விற்பனையில் என்னதான் சரித்திர சாதனை படைத்தாலும் ஒவ்வொரு கண்காட்சியிலும் அதன் முதல் பிரதிகள் படுதோல்வி அடைந்தவையே.

இந்த அதிரடி புத்தகக் கண்காட்சிக்கு நான் இன்னும் போகவில்லை. 13ம் தேதி வரைதான் என்றார்கள். கூட்டமும் விற்பனையும் அமோகம் என்று போனவர்கள் சொன்னார்கள். பார்க்கத்தான் கொஞ்சம் நிறம் மங்கியிருக்கிறதே தவிர புத்தகம், அதன் கட்டுமானம் போன்றவற்றில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள். இது ஆரம்பித்த நாளாக மூச்சுவிட நேரமில்லாத அளவுக்கு வேலைகள். நாளை மாலை முடிந்தால் மைலாப்பூருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். போவது உறுதியானால் ட்விட்டரில் அறிவிக்கிறேன். அங்கே என்னைச் சந்திக்கும் வாசகர்களுக்கு மட்டும் – அவர்கள் ஆகக்குறைந்த விலையில் வாங்கும் என் புத்தகங்களுக்கு மட்டும், ப்ரீமியம் தள்ளுபடியாக மேலும் நாலணா குறைத்துத் தர சிபாரிசு செய்கிறேன்! 😉

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643
இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
தேதி:
பிப்ரவரி  பிப்ரவரி 13 வரை.
[ஒரு பி.கு: ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு கூட சில பிரதிகள் இருக்கிறது என்று இப்போது தெரியவந்தது. ஓடுங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கே கிடைக்கக்கூடும்.]
Share

18 comments

  • முடியல……………….
    என்னால உடனே போயி வாங்க
    முடியல………………

  • //ஒவ்வொரு கண்காட்சியிலும் அதன் முதல் பிரதிகள் படுதோல்வி அடைந்தவையே.//
    ஒவ்வொரு சமகால படைப்பாளியின் சமகால சங்கடங்களுள் ஒன்றாகவே இது தீர்மானிக்கப்படுகிறது 🙂

    //நாலணா குறைத்துத் தர சிபாரிசு செய்கிறேன்//

    அடடே! எம்மாம் பெரிய மனசு உங்களுக்குன்னு நாலே வார்த்தையில சூப்பர்’ன்னு பாராட்டணும்ன்னு தோணுது 🙂

  • சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் முழு காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கினேன். இப்போ வடை போச்சே !!

    அடுத்த புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்காமல் கிழக்கில் ஆபர் போடுவார்கள் என்று எல்லோரும் காத்திருக்கும் ஆபத்து இருக்கிறது.

    ஏதோ பாத்து செய்யுங்க!!

    • தியாகராஜன்: கிழக்கின் எல்லா புத்தகங்களும் இந்தக் கண்காட்சியில் இருக்காது. எவையெல்லாம் அழுக்காகியிருக்கின்றனவோ அவை மட்டும்தான். அடுத்த கண்காட்சிக்குப் பிறகு அழுக்கின் எண்ணிக்கை அதிகமில்லாவிட்டால் இந்தக் கண்காட்சி இருப்பது சந்தேகம். எனவே உங்கள் வடை உமதே.

  • திரு.பாரா அவர்களுக்கு,

    கரூரில் உள்ள கிழக்குப் பதிப்பின் கிளையான எஸ்.ஆர்.பி. புக் ஹவுஸுக்கு அடிக்கடிச் செல்வது உண்டு. பெரும்பாலான புத்தகங்கள் மசாலாக்கள். அவைகளை நான் படிப்பதில்லை. சில நல்ல புத்தகங்கள் அரிதாக இருக்கும். ஆனால் புத்தகங்கள் கறை படிந்திருப்பதைப் பார்க்கும்போது வாங்கும் எண்ணம் போய்விடும். சில சமயம் பட்டியலைப் பார்த்துவிட்டு வாங்க போவேன். ஆனால் அந்தப் புத்தகம் கண்டிப்பாக இருக்காது. கடந்த புத்தகக் கண்காட்சிக்கு நாலைந்து புத்தகங்கள் வாங்க வந்தேன். அங்கிருந்தவர்கள் இல்லை என்று கை விரித்து விட்டார்கள். என்ன செய்ய?

    • மாரியப்பன்: haranprasanna@gmail.com வுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். வேண்டிய புத்தகங்களைக் குறிப்பிடுங்கள். சாத்தியங்களை அவர் சொல்வார்.

  • இதுதாண்டா தள்ளுபடி!
    10-2-2011 என் வாழ்வில் முக்கியமான நாள்.

    மாலை சுமார் 5 மணிக்கு T’Nagar சிவா விஷ்ணு கோவில் எதிரே உள்ள கிழக்கு விற்பனை நிலையத்தில் நுழைந்தேன் .அடுத்த ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்பதே தெரியாது.
    புத்தம் புதிய புத்தகங்கள்.யாரோ வேண்டுதல் நிறைவேற்றுவதைப்போல இலவசத்தை விட சற்று அதிகமான விலையில்.எதை எடுப்பது,விடுவது? 30 புத்தகங்களை வாங்கினேன் மொத்தம் 415 ரூபா..என்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.பில்லில் தேதியைப்பார்த்தேன் 2011தான் 1961இல்லை.
    நான்கு நூறு ரூபாவும் ஒரு 20 ரூபா தாளும் கொடுத்தேன்.5ரூபா சில்லறை இல்லை ஏதாவது புத்தகம் எடுத்துக்கிறீங்களா ன்னு விற்பனை பிரதிநிதி கேட்டது உணமையிலேயே இலக்கியம். (சுஜாதா ரசித்திருப்பார்).

    பத்ரிக்கு கோடானு கோடி நன்றிகள் !!

    வீட்டில் மனைவியும் மகளும் இதை நம்பவே இல்லை.பிறகு பில்லை பார்த்துவிட்டு guilty யாக feel செய்தார்கள்.(மகள்:25%க்கு மேல் அதிகமாக உள்ள தள்ளுபடியை திருப்பி கொடுத்துடுங்கப்பா.நாம எதோ தப்பு செய்தா மாதிரி இருக்கு)ஒரு சாம்பிள்:”அடேடே” by மதி
    6 volumes..ரூ.90மட்டுமே!!

    பிற முக்கிய குறிப்புகள்:

    1. கடையில் கும்பலே இல்லை என்பது மரியாதைக்காக சொல்வது.ஈ.காக்கா இல்லை என்பது உண்மை.எனவே யாரும் கும்பலை நினைத்து வராமல் இருந்துவிட வேண்டாம்.

    2.இது ONCE IN A LIFE TIME OPPORTUNITY.. தவற விடாதீர்கள்.

    3.Only cash transaction.No plastics.ஆயிரம் ரூபா எடுத்துப்போகவும்.

  • அழுக்கான புஸ்தகங்களை நன்றாகத் தோய்த்துக் காயவைத்து பின் விற்றால் பத்ரிக்கு நஷ்டம் வராதல்லவா பாரா? ஒரு கமிட்டி அமைத்து இந்தப் பரிந்துரையைப் பரிசீலியுங்கள்.

  • Hello Bossu, in india, we have to keep only one display piece for ever then sell it in the end of the day. Keep it in such a place to keep the book fresh. I knew that if I give good idea also, you guys will not accept it because of your ego.

  • பகிர்வுக்கு நன்றி சார்… நேற்று ரூ.1,200 மதிப்பிலான புத்தகங்களை ரூ.240க்கே வாங்கினேன்.. அப்படியே உள்ளே நுழைந்த உடன் அலிபாபா குகைக்குள் நுழைந்து புதையலை பார்த்தது போல் இருந்தது.

  • Has the sale been extended ? Kizhakku people at the counter were telling that the sale will be extended till next Sunday (Feb 20th) or so. Is it right ?

  • நல்ல அழுக்கான புத்தகங்கள் ஒரு செட் அருண்பிரபுவுக்கு என்று வேறு யாருக்கும் விற்காமல் இருக்க இறைவன் அருள் புரிவானாக!

  • Has the sale been extended ? Kizhakku people at the counter were telling that the sale will be extended till next Sunday (Feb 20th) or so. Is it right ?//

    Yeah. Sale is extended till Feb 20. Just now I confirmed by calling Kizhaku representative.

  • Sale extended till Feb 28. In Tnagar and Mylapore good Medical,History, Self Development books are available.
    Rush ot get your copies. Many are priced between Rs10 to Rs40

  • sir,
    just yr giving a statement that dollar dessam available in these both shops.but right from the first day i am visiting and searching,this type of golden books are unavailable.i understood this is yr advertising tricks.well done pa.ra sir.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!