நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008, எதிர்வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ம் தேதி வரை நெய்வேலி நகர புத்தகக் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
கண்காட்சியில் கிழக்கு பதிப்பகமும் [அரங்கு எண் 115, 116] Prodigyயும் [அரங்கு எண் 123, 124] தனித்தனி ஸ்டால்கள் அமைக்கின்றன. New Horizon Mediaவின் பிற அனைத்து பதிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
இக்கண்காட்சியை ஒட்டி நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கிழக்கு பதிப்பகம் கட்டுரைப் போட்டி ஒன்றினை நடத்துகிறது. ஜூலை 6ம் தேதி லிக்னைட் ஹாலில் இதற்கான பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் நடத்திய கட்டுரைப் போட்டிக்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பாக இருந்தபடியால் இந்த ஆண்டு இன்னும் விரிவாக இதனைத் திட்டமிட்டிருக்கிறோம்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கென கிழக்கு வெளியிடும் புத்தகங்கள் குறித்துப் பின்னர் எழுதுகிறேன். இப்போது புத்தகக் கண்காட்சி மைதானத்தின் வரைபடம் கிடைத்திருக்கிறது. அது இங்கே:
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.