143 – ஒரு புதிய முயற்சி

என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம். தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

2008லிருந்து நான் ட்விட்டரில் எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த குறுவரிகளின் தொகுப்பு இந்நூல். குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், இங்க்கி பிங்க்கி பாங்க்கி ஆகிய மூன்று அச்சு நூல்களில் வெளியானவற்றின் தொகுப்பு.

கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கின் சாத்தியங்களைப் பரிசோதித்துப் பார்க்கவே இம்முயற்சியைச் செய்தேன். சரியாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லவேண்டியது நீங்களே.

உங்களிடம் கிண்டில் இருந்தால் நீங்கள் நேரடியாக அமேசானில் இருந்து இதனை வாங்க முடியும். போன், கணினியில் கிண்டில் app உபயோகிப்பவர் என்றால் வாங்க முடிகிறதா என்று பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்.

வாங்குவது பெரிய சுமையாக இருக்கலாகாது என்பதால் அமேசான் வகுத்துள்ள அடிமாட்டு ரேட்டையே விலையாக [ரூ. 50] வைத்திருக்கிறேன். உண்மையில் 25 ரூபாய் விலை மட்டுமே வைக்கத் திட்டம். அமேசான் அத்திட்டத்தை நிராகரித்துவிட்டதால் வேறு வழியின்றி இவ்விலை.

மின் நூல்களுக்கு வாசக ஆதரவு எப்படி இருக்கிறது என்று நேரடியாகக் கண்டறிய இது ஒரு வாய்ப்பு எனக்கு. உங்கள் கருத்துகள், விமரிசனங்கள், மதிப்புரைகள், கண்டனங்கள், சாபங்கள் அனைத்தையும் [ கண்டெண்ட்டுக்கு அப்பால் தொழில்நுட்ப ரீதியிலும்] எனக்குத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

என் வாசக நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். இதனை உங்கள் பக்கங்களில் share செய்யுங்கள். இந்நூலைப் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள். வாங்கிப் பார்த்து நிறை குறைகளை எழுதச் சொல்லுங்கள். குறைந்த விலைப் புத்தகங்கள் பெருக இது ஒரு தொடக்கமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter