தான் திருப்பதி போய் வந்த சுவராசியப் பின்னனியோடு சகபயணிகளுக்கு தன்னிலை விளக்கமும், தான் வருவதற்கான நோக்கமும் குறித்து விளக்கியபடியே நீலநகரவனத்துக்குள் கோவிந்தசாமி நுழைகிறான்.
இரவு ராணி மலர் பூக்கும் தடாகம் தேடிக் கிளம்பும் கோவிந்தசாமியை தமிழ் அழகியும், முல்லைக் கொடியும் சந்திக்கும் போது அவர்களைப் பார்த்து ”சதிகாரிகள்” என அவன் அலற அவர்களோ அவனை மஜாஜ் மூலம் சாண்ட்விச்சாய் உருட்டி எடுக்கிறார்கள். “தாய் மஜாஜ்” (தாய்லாந்து மஜாஜ்) கேள்விபட்டிருப்போம். இந்த அத்தியாயத்தில் கோவிந்தசாமி மூலம் நமக்கு வாசி (ரசி)க்கக் கிடைப்பது சாண்ட்விச் மஜாஜ்!
உடலுறவில் லயித்துக் கிடந்த மூவரையும் மறைவில் இருந்து வீடியோ எடுத்த அதுல்யா ”குட்”, ”கட்” எனச் சொன்னதும் தங்களுக்குள் வைத்திருந்த கோவிந்தசாமியை விட்டு அவர்கள் இருவரும் விலகுகிறார்கள். கோவிந்தசாமி இரவுராணி மலரைக் கண்டானா? அதுல்யா எடுத்த வீடியோவை வைத்துக் கொண்டு சூனியனின் குழு என்ன செய்ய இருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள் பொறுமையாக காத்திருக்கலாம். காரணம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நேர்ந்த கதி அதுல்யா மூலம் கோவிந்தசாமிக்கு நேருவதற்கு பா.ரா. விடமாட்டார் என நம்பலாம்!
சாகரிகாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ”சக்தி”யாக நினைத்து நன்றி சொல்லும் கோவிந்தசாமி இந்த பூமி பந்தில் பல மாதங்களுக்கு முன் அவனைப் போல எக்கச்சக்கமாய் வியாபித்திருந்த கரைவேட்டிகளை நினைவுபடுத்துகிறான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.