Categoryமனிதர்கள்

ஆன்மாவும் அவரைக்காயும்

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைத்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அச்சம், விசுவாசம், அடிமைத்தனம்

விசுவாசம் அல்லது அடிமைத்தனத்தின் மூலம் தாற்காலிக லாபம் பெறுவோர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவர்களே. கும்பல் மனநிலையுடன் ஒருமித்த குரலில் ஒலிக்கும்போது கிடைக்கும் அற்பக் கிளர்ச்சியே பெரும்பாலானோருக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது. இது தனது தனித்துவத்தைக் கண்டறிய முடியாமையின் சோகம் அல்லது தனக்குத் தனித்துவம் உள்ளதென்றே உணர முடியாமையின் அபத்தம்.

மூக்குப் பொடி

கொடியணி மாடமோங்கிக் குலவுசீ ரானைக் காவில் படியினி லுள்ளார்செய்த பாக்கிய மனையான்செங்கைத் தொடியினினர் மதனன்சோம சுந்தரன் கடையினிற்செய்த பொடியினைப் போடாமூக்கு புண்ணியஞ் செய்யாமூக்கே. மேற்படி பாடல், திருவானைகாவில் மூக்குப் பொடிக் கடை வைத்திருந்த சோமசுந்தரம் என்பவரையும் அவரது மூக்குப் பொடியின் பெருமையையும் சொல்கிறது. இந்தப் பாடலை உ.வே. சாமிநாதய்யரும் அவரது ஆசிரியர்களுள் ஒருவரான தியாகராஜ செட்டியாரும்...

ஜேகே – அஞ்சலி

ஐந்தரைக்கு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், ஒரு ரெண்டவர் டைம் தர முடியும். அர்ஜெண்ட்டா ஒரு கதை தேவைப்படுது. சொல்ல முடியுமா?’ இந்தத் துறையில் இந்த அவசர அழைப்புகளுக்குப் பெரும்பாலும் எந்தப் பொருளும் கிடையாது. எதற்கு எப்போது விதித்திருக்கிறதோ, அப்போது அது தன்னால் நடக்கும். கதை என்ன, எதுவுமே இல்லாவிட்டாலும் நடக்கும். விதிக்கப்படவில்லையென்றால் என்ன முட்டுக் கொடுத்தாலும் அரை...

பூனைக்கதைக்கு வாசகசாலை விருது

பூனைக்கதைக்கு வாசக சாலை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாசகசாலை அமைப்பாளர்களுக்கு நன்றி.
நாளை மாலை யதி அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாளையும் நாளை மறுநாளும் இந்த இரு விழாக்களிலும் இருப்பேன்.
பூனைக்கதை அறிமுகம் | கிண்டிலில் பூனைக்கதை
 

அஞ்சலி: தகடூர் கோபி

கோபியுடன் எனக்கு நேர்ப்பழக்கம் கிடையாது. ஏதோ ஒரு தமிழ் இணைய மாநாட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால் யுனிகோட் புழக்கத்துக்கு வருவதற்கு முந்தைய திஸ்கி காலத்தில் [கிபி 2000] இரா. முருகன் நடத்தி வந்த ராயர் காப்பி க்ளப் மூலம் அவரை எனக்குத் தெரியும். கணினியில் தமிழில் எழுதுவது – வாசிப்பது சார்ந்த சிக்கல்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் கோபி சலிக்காமல் மின்னஞ்சல்கள் மூலம்...

அஞ்சலி: முத்துராமன்

காசு பணம், சிகிச்சை, ஒட்டு, உறவு, நட்பு, கலை, இலக்கியக கசுமாலம் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
முத்துராமன்தான் செத்துப் போனான்.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள். ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். இத்தனைக் காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறான்.

இன்று விடுதலை.

அஞ்சலி: ஜ.ரா. சுந்தரேசன்

அவர் சாமியாராகப் போன கதையை எத்தனை முறை அவரைச் சொல்ல வைத்துக் கேட்டிருப்பேனோ, கணக்கே கிடையாது. ‘நானும் ஆசைப்பட்டு அலைஞ்சிருக்கேன் சார். ஆனா நடக்கலை. நீ பொருந்தமாட்டன்னு தபஸ்யானந்தா சொல்லிட்டார் சார். அதைத்தான் தாங்கவே முடியலை’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன். ‘அவ்ளோதானா? பொருந்தமாட்டேன்னா சொன்னார்? தப்பாச்சே. ஓடிப்போயிடு; சன்னியாச ஆசிரமத்தையே நாறடிச்சிடுவேன்னு அடிச்சித் துரத்தியிருக்கணுமே’...

மழைப்பாடல் V 2.0

நகரெங்கும் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது. காற்றின் ஈரம், பதமான குளிர்ச்சியைத் தருகிறது. இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னை முந்திக்கொண்டு விரைந்த கார் ஒன்று ஓரத்தில் தேங்கிய நீரை வாரி இறைத்துச் செல்ல, எனக்கு முன்னால் போன பைக் உரிமையாளர் உடலெங்கும் சேற்று நீர். நபருக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு படு பயங்கர சேசிங் காட்சியை...

ரசிகன்

அவன் பெயர் காந்தி பாபு. பெயரைச் சொல்வதைக் காட்டிலும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லுவதை மிகவும் விரும்புவான். இருக்கலாம். அதிலென்ன தவறு? லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள ஒரு விஜய்க்கு ஒரு காந்தி பாபுவும் ரசிகனாக இருப்பதில் பிழையில்லை. ஆனால் என்னை அதிர்ச்சியுற வைத்த விவரம், அவன் பகவதி படம் பார்த்து விஜய் ரசிகனானான் என்பது. புதிய கீதையில் அந்த ரசிக மனோபாவம் தீவிரம் கொண்டது என்பது. சமீபத்திய கேரளப்...

சேட்டுக் காகங்கள்

சனிக்கிழமைகளில் மட்டும்தான் இந்தக் காக்கைகள் வருகின்றன என்று அம்மா சொன்னாள். வாரம்தோறும் அலாரம் வைத்தாற்போலச் சரியாகக் காலை எட்டு மணிக்கு அவை வீட்டு வாசலில் ஆஜராகிவிடுகின்றன. தயாராக, தடிதடியாக நாலு சப்பாத்திகளைச் சுட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்துவிடுகிறாள் அம்மா. பெரிய பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடப் போட ஒவ்வொரு காக்கையும் வரிசையில் வந்து ஒரு துண்டு எடுத்துக்கொண்டு போகிறது. எண்ணி நாலு...

அசோகமித்திரன் – மூன்று குறிப்புகள்

அசோகமித்திரனைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு ம.வே. சிவகுமார் மூலம் கிடைத்தது. ‘ஒரு வருஷம் டைம் ஃப்ரேம் வெச்சிக்கடா. வேற யாரையும் படிக்காத. அசோகமித்திரன மட்டும் முழுக்கப் படி. சீக்கிரம் முடிச்சிட்டன்னா, ரெண்டாந்தடவ படி. அவரப் படிச்சி முடிச்சிட்டு அதுக்கப்பறம் எழுதலாமான்னு யோசிக்க ஆரம்பி’ என்று சிவகுமார் சொன்னார். உண்மையில் அசோகமித்திரனை முழுக்கப் படிக்கும் ஒருவருக்கு எழுதலாம் என்ற எண்ணம் இருந்தால்...

மாயவரத்தில் பேசுகிறேன்

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12, 2017) அன்று மாயவரத்தில் நடைபெறவுள்ள பேலியோ கருத்தரங்கில் பங்கு பெறுகிறேன். பட்டமங்கலம் தெரு கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இருப்பேன். கருத்தரங்கு அநேகமாக மதியம் முடிந்துவிடும். அதன்பின் பழைய நண்பர் பரிமள ரங்கநாதரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது தவிர வேறு வேலையில்லை. எனவே, சமகால நண்பர்களையும் சந்தித்து உரையாட இயலும். மயிலாடுதுறையில்...

அஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்

புத்தகக் காட்சியில் ஞாநி ஸ்டால் வாசலில் சிவகுமார் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் சட்டென்று இழுத்து அருகே உட்காரவைத்து, ‘அப்றம்? எளச்சிட்டாப்டி?’’ நான் இளைத்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழகியசிங்கரிடம் இருந்து போன் வந்தது. விருட்சத்தின் 101வது இதழை வெளியிட வரவேண்டும் என்று சொன்னார். ‘சிவா, மௌலி கூப்பிடறார். விருட்சம் வெளியிடணுமாம். வாயேன்கூட.’ அன்று விருட்சத்தின் 101வது இதழை நான்...

லா.ச.ரா : அணுவுக்குள் அணு

லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம்...

உறவே பயம்

பலகாலமாக எனக்கு உறவுக்காரர்களாக இருப்போரில் சிலர் கூடி வாட்சப்பில் ஒரு குழு ஆரம்பித்தார்கள். உறவுக்காரர்களிலேயே உத்தமனான ஒரு அயோக்கியன் என்னை அந்தக் குழுவில் சேர்த்துவிட்டான். இன்னொரு பரம அயோக்கியன் என் மனைவியையும் அதே குழுவில் சேர்த்துத் தொலைத்தான். மேற்படி வாட்சப் குழுவானது ஆரம்பத்தில் மிகவும் போரடித்தது. கூடி கும்மியடிக்கும் அத்தனை பிரகஸ்பதிகளும் தம்மை எம்பெருமானார் ராமானுஜரின் செகண்ட் எடிஷன்...

விருது மறுப்பு

ஜெயமோகன் பத்ம விருதை மறுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் போல் தமிழ்ச்சூழல் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்விருதைப் பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் அவர். ஆயினும் காழ்ப்புக் கசடுகளை மனத்தில் கொண்டு இதனை மறுத்திருக்கிறார்.

திறமையில் வாடிய கலைஞன்

மணிக்கொடி ரைட்டர்ஸ மொத்தமா ஒரு தடவ படிச்சிரு. அசோகமித்திரன மனப்பாடம் பண்ணு. சுந்தர ராமசாமிய படிச்சிண்டே இரு. அடுத்த ஜெனரேஷன்ல நாஞ்சில்நாடன் முக்கியம். லவ் பண்ற ஐடியா இருந்தா மட்டும் வண்ணதாசன படி. தோப்பில் மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. முடிஞ்சா படிச்சிப் பாரு. லேங்குவேஜ் கொஞ்சம் டஃப். ஆனா செம மண்டை அது. நமக்குத் தெரியாத வேற ஒரு லைஃப போர்ட்ரெய்ட் பண்றாரு. மாமல்லன் ஒரு காலத்துல என் ஃப்ரெண்டுதான்...

அஞ்சலி: ம.வே. சிவகுமார்

  தாம்பரத்தில் இருந்த சிவகுமார் வீட்டு மாடியில் தனியே ஒரே ஓர் அறை உண்டு. பத்துக்குப் பத்தோ பத்துக்குப் பன்னிரண்டோ. சிறிய அறைதான். அந்த அறையில் இரண்டு புத்தக அலமாரிகளும் ஒற்றைக் கட்டிலொன்றும் கொடகொடவென்று ஓடும் மின்விசிறி ஒன்றும் இருக்கும். அவரது டேபிள் நிறைய எழுதிய தாள்களை மட்டுமே பார்த்த நினைவு. உதிர்ந்த வேப்பம்பழங்கள்போல் குண்டு குண்டான கையெழுத்து அவருக்கு. நாலு வரி எழுதுவார். ஏதாவது தப்பு...

(கர்ம) வினைத் தொகை

ஒரு வரி. ஒரே ஒருவரிக் கோபம். கோபம் கூட இல்லை அது. விவரிக்க முடியாத ஒரு பெருந்துயரத்தின் மிக மெல்லியக் கசிவு. நேற்று முதல் என்னைச் செயல்படவிடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பெரியவரின் சொல். அவரை எனக்குக் கடந்த ஓராண்டாகத்தான் தெரியும். அவரைக் குறித்து நான் அறிந்த முதல் தகவல் அவர் ஒரு கடன்காரர் என்பது. இன்றுவரை இதை மட்டுமே விரிவாக, இன்னும் விரிவாக, மேலும் விரிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி