விசுவாசம் அல்லது அடிமைத்தனத்தின் மூலம் தாற்காலிக லாபம் பெறுவோர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவர்களே. கும்பல் மனநிலையுடன் ஒருமித்த குரலில் ஒலிக்கும்போது கிடைக்கும் அற்பக் கிளர்ச்சியே பெரும்பாலானோருக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது. இது தனது தனித்துவத்தைக் கண்டறிய முடியாமையின் சோகம் அல்லது தனக்குத் தனித்துவம் உள்ளதென்றே உணர முடியாமையின் அபத்தம்.
காகிதங்களைக் கடந்து..
பழைய ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்திருக்கும் இந்நேரத்தில் இதனை எழுதுவது பொருந்துமென நினைக்கிறேன். மேற்படி ரூபாய்த் தாள்கள் இரண்டும் இனி செல்லாதென (டெக்னிகலாக இது தவறு. செல்லுபடியாகும் இடங்கள் குறைக்கப்பட்டன; அவ்வளவே. படிப்படியாக அது இனி முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும்) அறிவிக்கப்பட்ட தினம் என் வீட்டில் இருந்த தொகையின் மதிப்பு, வருமான வரி நோட்டீஸ் வர...