ராஜன் எனக்கு முப்பத்தைந்தாண்டுக் கால நண்பர். கல்கியில் இருந்து பழக்கம். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பின் முகப்பை அவர்தான் வரைந்தார். ஒன்றிரண்டு தவிர பிற பெரும்பாலான நாவல்கள்-சிறுகதைத் தொகுப்புகளுக்கு அவர்தான் அட்டைப்படம் வரைந்திருக்கிறார். வெளிவர உள்ள சலம் எனக்கு எழுபத்தொன்பதாவது புத்தகம். அதற்கும் அட்டைப்படம் வரைந்திருப்பவர் ராஜன்தான்.
அளந்து அளித்த சொல்
ந. பிச்சமூர்த்தியைக் குறித்து லா.ச. ராமாமிருதத்தின் எழுத்தில் எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவரது சிந்தாநதி தொகுப்பில் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி இரண்டு கட்டுரைகள் இருக்கும். இரண்டிலும் பிச்சமூர்த்தி வருவார். அவர் மீது லாசராவுக்கு இருந்த மரியாதை வெளிப்படும். அந்நாளில் பிற அனைத்து எழுத்தாளர்களும் பிச்சமூர்த்தியை எவ்வளவு மகத்தான ஆளுமையாகக் கருதினார்கள் என்பது புலப்படும். இப்போது அதனை...