ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே] ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது. ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும்...
அவனேதானாயிடுக
பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது. ‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை. பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும் அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும். நமது பிறப்பு அப்படி. ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும்...
பொலிக! பொலிக!
விரதம் எனும் புரதம்
நண்பர்களுக்கு விஜயதசமி தின நல்வாழ்த்துகள். இந்த வருட நவராத்திரி எனக்குச் சற்று ஸ்பெஷல். பன்னெடுங்காலம் முன்னர் லாசரா ஒருமுறை நவராத்திரி விரதம் குறித்துச் சொன்னார். நவராத்திரியோ, சிவராத்திரியோ ஏதோ ஒரு சாக்கு. விரதம் நல்லது. உண்ணாதிருப்பது அனைத்திலும் நல்லது. ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, இருவேளை குளித்து பூஜை செய்து, செய்யும் தொழில்தவிர வேறெதையும் நினையாதிருந்து பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்...
வெச்சாச்சு
ஹரே கிருஷ்ணா!
இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் சேரும் புதிய பொம்மைகளுள் எனக்குப் பிடிதது, கிருஷ்ண பாகவதர் கச்சேரிக் காட்சிகள்.
திருவிளையாடல் படத்தில் சிவாஜியே அனைத்து இசைக்கலைஞர்களாகவும் உட்கார்ந்து வாசிக்கிற ஸ்டைல்தான். ஒரு முழு கிருஷ்ணர் செட். அனைத்து கிருஷ்ணர்களும் ஏகாந்தமாகப் பாடி, வாசித்துக் களிக்கிறார்கள்.
என்ன அழகு இந்த பொம்மைகளில்!
பாம்புப் பிரச்னை
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம் கலங்குவதெவரைக் கண்டால் அவர் என்பர் கைவில்லேந்தி இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக் கிறுதி யாவார். கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. எளிமையாக இதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமென்றால் இவ்வாறு சொல்லலாம்: ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான்...
என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...