Categoryதீவிரவாதம்

யுத்தம் ஏன் உதவாது?

நேற்று நான் எழுதிய ஒரு குறிப்பு உண்டாக்கியிருக்கும் அதிர்வுகளையும் சலனங்களையும் மாற்று / எதிர் கருத்துகளையும் இன்று முழுமையாக வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அன்ஃபிரண்ட் செய்துவிட்டுப் போய்விட்டார். என்னை விடுங்கள்; நான் வெளியாள். என் கவலையெல்லாம் இப்படிக் கருத்து வேறுபாடு வரும்போது அவர் மனைவி என்ன பாடு படவேண்டியிருக்கும் என்பதே. பொதுவில் சமூகம் சகிப்புத்தன்மையை இழந்து வருகிறது. அதைவிட அபாயம்...

ஒரு பிரார்த்தனை

நண்பர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகள். பிரிவினை சக்திகளின் பிடியில் விழுந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர்மீது பரிவும் பரிதாபமும் எழுகிறது. அவர்களைச் சிந்திக்கவிடாமல் போலி அறச்சீற்ற உணர்வால் தாக்கிக்கொண்டிருக்கும் வெற்றுக் கும்பலைக் காலம் களையெடுக்கும். இந்த தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிற சுதந்தரத்தைக்கூட இந்த தேசத்தின் ஜனநாயகம்தான் வழங்கியிருக்கிறது என்பதை...

IS – புதிய புத்தகம்

அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது. இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக...

ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம்.

ஒத்திகைகள் ஒழிக!

நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு நண்பர் ப்ரூனோ என் அலுவலகத்துக்கு வந்தார். கண்ணனுடன் அவருக்கு ஏதோ வேலை இருந்தது. நான் புறப்பட இருந்த சமயம். அமெரிக்க தூதரகத்தில் ஏதோ பிரச்னை; அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் என்று சொன்னார். நான் வீட்டுக்குப் போகும் வழியில் அண்ணாசாலை அதிகம் வராது. மிஞ்சிப் போனால் முன்னூறு மீட்டர். எல்டாம்ஸ் சாலை சிக்னல் முதல் அறிவாலயம் வரை மட்டுமே. இடப்புறம் விஜயராகவாச்சாரி...

Fitna – தேவையற்ற அச்சுறுத்தல்

குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது. பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிக்கத்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter