Categoryஇசை

ஸ்ருதி பாலமுரளி

யூட்யூபில் ஸ்ருதி பாலமுரளி என்ற பெண்ணின் சானலை இப்போதெல்லாம் அடிக்கடி திறக்கிறேன். இவர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார் என்று அவரது லிங்க்ட் இன் ப்ரொஃபைல் சொல்கிறது. எங்காவது வேலை பார்ப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால் யூட்யூபில் இவர் காட்டும் முகம் முற்றிலும் வேறு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றிருக்க...

வைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி

சைவ நாகஸ்வர மரபை ஆவணப்படுத்திய லலிதா ராமின் பரிவாதினி அமைப்பு இப்போது வைணவ நாகஸ்வரக் கலை மரபை ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது மிக முக்கியமானதொரு பணி.  நாகஸ்வர இசையின்றிக் கோயில்கள் கிடையாது. குறிப்பாக வைணவ ஆலயங்களின் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைக்கும் பிரத்தியேக இசை இணை உண்டு. உற்சவங்களில் இது உச்சம் பெறும். கோயில்களுக்குப் போகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கு ஒலிக்கும் நாகஸ்வர இசையை...

ராயல்டி விவகாரம்

ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.

How to Name it?

இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.

ஜாலங்களும் ஜிமிக்கிகளும்

டிசம்பர் வந்தால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்குச் செல்வது என்பதை ஒரு காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தேன். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. எல்லா சபாக்களின் சீசன் டிக்கெட்களும் இலவசமாகக் கிடைக்கும். விருப்பமிருக்கும் கச்சேரிகளுக்குச் செல்வேன். விரும்பாத பாடகர்களின் கச்சேரிகளுக்கும் கேண்டீன் நிமித்தம் சில சமயம் செல்வேன். போன கடமைக்காக அவ்வப்போது விமரிசனம் மாதிரி...

இசைபட…

எனக்குக் கொஞ்சம் சங்கீதக் கிறுக்கு உண்டு. பெரிய தேர்ச்சி கிடையாது என்றாலும் கொஞ்சம் சூட்சுமம் புரிந்து ரசிக்கத் தெரியும். ஒரு காலத்தில் வீணையெல்லாம் கற்றுக்கொண்டு நாளெல்லாம் வாசித்துப் பலபேரைப் பகைத்துக்கொண்டிருக்கிறேன். இசையென்றால் கர்நாடக இசை ஒன்றுதான் என்று வெகுநாள் வரை மற்ற எதையும் கேட்கக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இளையராஜா வழியே எனக்கு மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்கள்...

ஓர் அறிவிப்பு

இந்தத் தளத்தின் வலப்பக்கத்தில் ஒரு புதிய பகுதியை நீங்கள் காணலாம். இனி [கூடியவரை] தினசரி ஒரு நல்ல பாடலை இங்கே வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் பேச்சு வடிவிலும்கூட. உரையாடலாகச் சில விஷயங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. யாருடனாவது உரையாடி, தொகுத்து வழங்கும் திட்டம். எல்லாம் என்னுடைய தொழில்நுட்ப [அஞ்]ஞானம் எத்தனை கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்தது. இன்னும் ஆடியோ...

நாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம்

சுப்ரமணியபுரம் படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடலுக்குப் பிறகு நான் தினசரி கேட்கிற பாடலாகியிருக்கிறது நாக்கமுக்க. பொதுவாகக் குத்துப்பாடல் ரசிக்கிறவனில்லை நான். தாளத்தைவிட இசையில்தான் நாட்டம் அதிகம். அந்த வகையில் என் தலைமுறை இசையமைப்பாளர்களில் எனக்கு ரெஹ்மானைவிட கார்த்திக் ராஜா மிக நெருக்கமானவர். வித்யாசாகர், பரத்வாஜ் இருவரும்கூட என்னைக் கவர்ந்த சில பாடல்களைத் தந்தவர்கள் என்றாலும் அவ்வப்போது அவர்கள்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி