ஒரு கலைஞனைக் கலையிலேயே வாழ விடுவது என்பது அவன் வாழும் சமூகத்தின் கடமைகளுள் ஒன்று என்று திடமாக நம்புகிறேன். இளையராஜாவையெல்லாம் பேச வைத்துப் பார்ப்பது சாடிச மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே.
பாடம்
போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.