எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன்.
எஸ்ராவின் புத்தகங்கள்
மழையால் புத்தகங்கள் பாழானது குறித்து எஸ். ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்தேன். அந்த வலி புரிய வேண்டுமானால் அவர் வந்த வழி தெரிந்திருக்க வேண்டும். எஸ்ரா தொடக்கம் முதலே எந்தக் குழுவுடனும் இணையாதவர். தனக்கென எந்தக் குழுவையும் வைத்துக்கொள்ளாதவர். அதாவது, அவருக்கு இதுவரை கிடைத்த அனைத்தும் அவரது சொந்த முயற்சியால் மட்டுமே கிடைத்தவை. தன்னையும் தன் எழுத்தையும் மட்டுமே நம்பித் தமிழிலும் பிழைத்திருக்க முடியும்...
எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை
இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர...
எழுத்துரு பிரச்னைகள்
இந்தக் குறிப்பு எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டுமானது. மற்றவர்கள் கடந்துவிடலாம். தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பகங்கள் உண்டோ, அத்தனை எழுத்துருக்களும் உண்டு. ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமான எழுத்துரு / என்கோடிங்கில் இவ்வளவு காலம் புத்தகங்களை அச்சிட்டு வந்திருக்கின்றன. இதில் மென்பொருள் என்றே சொல்ல முடியாத வன்னெழுத்துருக்களும் சேர்த்தி. (key உள்ள எழுத்துரு ஒன்றை நானே...
பின் கதைச் சுருக்கம்
இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி...
கிண்டிலில் யதி
கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து...
பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா
யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக. பினாக்கிள் வெளியீடுகள் அரங்கில் 20 சதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
அஞ்சலி: பாலகுமாரன்
பாலகுமாரன் இறந்துவிட்டார் என்று என் மனைவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தபோது தொலைபேசி சிக்னலும் கிட்டாத ஓர் அறைக்குள் கதை விவாதத்தில் இருந்தேன். வருத்தமாக இருந்தது. அவரை நினைவுகூர பல நல்ல சம்பவங்கள் எனக்குண்டு. ஆனாலும் கடைசிக் காலத்தில் அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்படியாக ஒரு காரியம் செய்தேன். அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு குறுவரி...
அஞ்சலி: முத்துராமன்
காசு பணம், சிகிச்சை, ஒட்டு, உறவு, நட்பு, கலை, இலக்கியக கசுமாலம் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
முத்துராமன்தான் செத்துப் போனான்.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள். ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். இத்தனைக் காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறான்.
இன்று விடுதலை.
கொனஷ்டை
ஃபேஸ்புக்கில் எனது இந்தக் குறிப்புக்கு நண்பர் ராஷித் அகமது எழுதிய கமெண்ட் கீழே உள்ளது. எழுதும்போது ஒருவரால் சிரித்தபடியோ, குறைந்தது புன்னகையுடனோ எழுத முடியுமா? அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். நான் எப்படி எழுதுகிறேன் என்று சொல்லுகிறேன். எழுதுவதையும் யோசிப்பதையும் நான் ஒன்றாகச் செய்வதில்லை. முழுதும் யோசித்து முடிக்காமல் எழுத அமரமாட்டேன். உட்கார்ந்துவிட்டால் நடுவே நிறுத்தி யோசிக்கிற வழக்கம்...
கையெழுத்து
குமுதத்துக்கு சாரு நிவேதிதா எழுதிய கடிதம் ஒன்றை அவரது தளத்தில் கண்டேன். அந்தக் குறிப்பிட்ட விவகாரம் குறித்த என் கருத்தை அவரிடம் தனியே சொல்லிவிட்டபடியால் அது இங்கே அநாவசியம். ஆனால் அந்தக் கடிதத்தில் கண்ட அவரது கையெழுத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
அசோகமித்திரன் – மூன்று குறிப்புகள்
அசோகமித்திரனைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு ம.வே. சிவகுமார் மூலம் கிடைத்தது. ‘ஒரு வருஷம் டைம் ஃப்ரேம் வெச்சிக்கடா. வேற யாரையும் படிக்காத. அசோகமித்திரன மட்டும் முழுக்கப் படி. சீக்கிரம் முடிச்சிட்டன்னா, ரெண்டாந்தடவ படி. அவரப் படிச்சி முடிச்சிட்டு அதுக்கப்பறம் எழுதலாமான்னு யோசிக்க ஆரம்பி’ என்று சிவகுமார் சொன்னார். உண்மையில் அசோகமித்திரனை முழுக்கப் படிக்கும் ஒருவருக்கு எழுதலாம் என்ற எண்ணம் இருந்தால்...
ராயல்டி விவகாரம்
ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.
அஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்
புத்தகக் காட்சியில் ஞாநி ஸ்டால் வாசலில் சிவகுமார் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் சட்டென்று இழுத்து அருகே உட்காரவைத்து, ‘அப்றம்? எளச்சிட்டாப்டி?’’ நான் இளைத்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழகியசிங்கரிடம் இருந்து போன் வந்தது. விருட்சத்தின் 101வது இதழை வெளியிட வரவேண்டும் என்று சொன்னார். ‘சிவா, மௌலி கூப்பிடறார். விருட்சம் வெளியிடணுமாம். வாயேன்கூட.’ அன்று விருட்சத்தின் 101வது இதழை நான்...
லா.ச.ரா : அணுவுக்குள் அணு
லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம்...
எலி அறியும் மசால்வடைகள்
சாரு நிவேதிதாவின் இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். பத்திரிகைத் துறை முன்னைக்காட்டிலும் வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாகச் சிறிது காலமாகப் பத்திரிகை எழுத்திலிருந்து ஒதுங்கியிருப்பதால் என்னளவில் பாதிப்பின்றி இருக்கிறேன். சந்தடி சாக்கில் ஒரு சேதி சொல்லிவிடுகிறேன். ஓரிரு மாதங்கள் முன்னர் ஒரு பத்திரிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. விழா கொண்டாடுகிறோம்;...
சிங்கிள் டீ
ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.
ஜானகிராமன் மறுபிறப்பு
இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி ரொம்பத் திருப்தி. நாலைந்து நாள் போய்வர முடிந்தது என்பதைத் தாண்டி, என் நீண்ட நாள் ஆதங்கம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த ஜானகிராமன் புஸ்தகங்களுக்கு ஏன் ஒரு விமோசனமே கிடைக்கமாட்டேனென்கிறது என்று ரொம்ப காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். பெரிய சௌந்தரிய உபாசகர். அவரது கதையெல்லாம் கண்கூசச் செய்யும் பேரெழில் கொண்டவை. யார் என்ன சொன்னால் எனக்கென்ன? எழுத்தின் பிரம்மாண்டப் பேரழகு...
இ.பாவின் வலைப்பதிவு
‘….வாருங்கள். சாப்பிடப் போவோம்’ என்று சொல்லிக்கொண்டே முன் சென்றார் முதல் அமைச்சர் என்.டி.ஆர்.
“இதுதான் காலம்சென்ற என் மனைவி. இவளை வணங்கிவிட்டுத்தான் என் காலைப் பணிகளைத் தொடங்குவேன்”என்று சொல்லிக் கொண்டே அவ்வண்ணப் படத்தெதிரே மெய்ம்மறந்து சில விநாடிகள் நின்றார் அவர்.
‘A pity!!. எனக்குப் பார்வை இல்லை’ என்றார் ஹக்ஸர்.
‘அகக்கண்ணால் பாருங்கள், தெரியும்’ என்றார் என்.டி.ஆர் உரக்க சிரித்துக் கொண்டே.
கொண்டாட ஒரு தருணம்
நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...


