மூத்த எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் காலமானார். நெடுநாள் கல்கி, விகடன் வாசகர்கள் என்றால் அவர் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நல்ல நகைச்சுவை எழுத்தாளர். மாம்பலம் டைம்ஸ் என்னும் பிராந்தியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலமாக இதழ் தவறாமல் ‘தமாஷா வரிகள்’ என்னும் பத்தியை எழுதி வந்தார். விரைவில் அந்தப் பத்தி ஆயிரமாவது அத்தியாயத்தைத் தொடவிருந்தது. ஒரு வார இதழில் ஆயிரம் கட்டுரைகள் –...
அஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)
மே 2017ல் கடுகு சாரிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இருந்த வரிகள்: //அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன்...
அஞ்சலி: பாலகுமாரன்
பாலகுமாரன் இறந்துவிட்டார் என்று என் மனைவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தபோது தொலைபேசி சிக்னலும் கிட்டாத ஓர் அறைக்குள் கதை விவாதத்தில் இருந்தேன். வருத்தமாக இருந்தது. அவரை நினைவுகூர பல நல்ல சம்பவங்கள் எனக்குண்டு. ஆனாலும் கடைசிக் காலத்தில் அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்படியாக ஒரு காரியம் செய்தேன். அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு குறுவரி...