பிப்ரவரி 14 அன்று ‘இறவான்’ ஒலிப் புத்தகமாக வெளியாகிறது. ஸ்டோரி டெல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இதனை ஒட்டி ஸ்டோரி டெல்லின் பவ்யா கீர்த்திவாசனுக்கு ஒரு சிறிய பேட்டி அளித்தேன். கீழே உள்ள வீடியோவில் அதனைக் காணலாம்.
இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும். கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு...
இறவான்: ஒரு மதிப்புரை – கோடி
இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம் ஹராரி”யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன். இது...
ஆசி
சிறிய அளவிலாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்ததும் வைத்து வணங்க இரு பாதங்கள் கிடைக்காதா என்று மனம் தேடத் தொடங்கும். பாதங்களுக்குப் பஞ்சமில்லை. பொருத்தப்பாடு ஒன்று இருக்கிறது. அப்பா இருந்தவரை எனக்குப் பிரச்னை இருந்ததில்லை. இதைச் செய்திருக்கிறேன் அப்பா என்று தகவலாகச் சொல்லும்போதே என் மானசீகத்தில் காலடி தென்பட்டுவிடும். உடனே அவர் படிக்கத் தயாராகிவிடுவார். முடித்துவிட்டு...
நிரந்தரமானவன் [தே. குமரன்]
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன். எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது அடுத்த...
இறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்
“இறவான்” இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது. சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் – “இறவான்” அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence நிச்சயம் நினைவுக்கு வந்தது. ஆனால் அது கூட – ஓவியத்தின் பாலுள்ள...
தராத புத்தகங்கள்
நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள் கழித்து, என்...
இறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]
கம்பன் ஒரு சரஸ்வதி சிலையினை வழிபட்டானாம், மகனின் சம்பவத்துக்கு பின் சோழநாடு வேண்டாமென சேர நாட்டுக்கு செல்லும்பொழுது அந்த சிலையினை கொண்டு சென்றானாம் இன்றும் அச்சிலை பத்மநாபபுரத்தில் உண்டாம், வருடத்திற்கொரு முறை யானையில் பவனி கொண்டு வருவார்களாம் எனக்கென்னமோ அச்சிலை பா.ராகவன் வீட்டில் இருக்கலாம் போல தோன்றுகின்றது, ஆம் “இறவான்” எனும் அவரின் நாவலை படித்தபின் அப்படித்தான் தோன்றுகின்றது...