கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 5)

ஒரு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அனால் நம் கோவிந்தசாமிக்கும், சாகரிகாவுக்கும் இடையில் அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கோவிந்தசாமியின் முந்திய தலைமுறைகளின் வாழ்வை நகைச்சுவை கலந்த நடையில் வாசித்தது வெகு சுவாரசியமாய் இருந்தது. அடிப்படை புரிதல் இல்லாத இருவர் பிரிவது இயல்பு தான், மேலும் சொல்ல போனால் அது தான் இருவருக்குமே நல்லது. இது தெரியாத நம் கோவிந்த் சாகரிகாவை தேடிச் செல்வது பெரும் மடத்தனம். இருவருக்குமான சித்தாந்தங்கள் வேறு வேறாக இருக்கிறது.
கோவிந்தசாமியின் மத நம்பிக்கையும் சாகரிகாவின் அறிவு சார்ந்த நம்பிக்கையும் மோதிக் கொண்டே தான் இருக்கும். கதையில் அடுத்து நம் சூனியன் கோவிந்தசாமியின் நிழலை மட்டும் அழைத்துச் செல்வது அதிசயமாக இருந்தது.( புனைவு தான் என்றாலும் எழுத்தாளரின் கற்பனை திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை ).
பால் பேதம் பார்க்காத நகரில், நிழலை அழைத்துக் கொண்டு போகும் சூனியன் அவளை கண்டுப்பிடிப்பானா?
அவள் என்ன சொல்ல காத்திருக்கிறாள் என்றும் தெரியவில்லை. பார்ப்போம்!
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி