கிறுக்கெழுத்தாளன்

சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன்.

புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை.

இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ.

அகராதித் துணையின்றி கம்பர் முதல் நம்மாழ்வார் வரை வாசித்துப் புரிந்துகொள்ளவும் புரிந்ததை எடுத்துச் சொல்லவும் முடிகிறதே என்று எண்ணி சமாதானப்படுத்திக்கொண்டேன்.

பாண்டத்தைச் செய்பவன் குயவனென்றால், குயவனைச் செய்வது பாண்டம்தான்.

4 comments on “கிறுக்கெழுத்தாளன்

  1. துளசி கோபால்

    ரொம்பச்சரி.

    என்னைப்பொருத்தவரை, ‘ஓல்ட் டாக் கேனாட் லேர்ன் நியூ ட்ரிக்ஸ்’. அதான் கப்சுப்ன்னு இருக்கேன்:-)

Leave a Reply

Your email address will not be published.