பிரபாகரன் வாழ்வும் மரணமும் ஒலிப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. ஸ்டோரி டெல் இதனை வெளியிட்டிருக்கிறது.
ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தபோது சென்னை புத்தகக் காட்சியில் போஸ்டர் கூடாது; விளம்பரம் கூடாது என்று தொடங்கி, அரங்கில் வைக்கவே கூடாது என்றெல்லாம் கடைக்கு வந்து கட்டளை போட்டார்கள். அனைத்தையும் மீறி எவ்வளவோ பதிப்புகள் வரத்தான் செய்தன. கடந்த வாரம்கூட ஜீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜி சொன்னார். ‘உங்கள் புத்தகங்களில் அதிகம் விற்பது இதுதான்.’
உண்மையிலேயே இப்போது ஓடிக்கொண்டிருப்பது எத்தனையாவது பதிப்பு என்று எனக்குத் தெரியாது.