Categoryசர்ச்சை

ஆண்டாள் படும் பாடு

நேற்று புத்தகக் காட்சியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஆர். வெங்கடேஷின் தொலைபேசி அழைப்பு மூலம் எனக்குப் புதிய தலைமுறை டிவியில் என் தலை உருட்டப்பட்டுக்கொண்டிருந்த விவரம் தெரியவந்தது. அடுத்தடுத்து இன்னும் இரண்டு நண்பர்கள் அழைத்து அதையே சொன்னார்கள். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பாதி நிகழ்ச்சி முடிந்திருந்தது. திமுக கண்ணதாசன் பேசி முடித்து, ஆசீர்வாதம் ஆச்சாரி பதினொரு மணி சீரியல் கதாநாயகி போல...

எப்படி இருக்கலாம், கல்வி? 5

சமச்சீர் கல்வி என்பது என்ன? மிக எளிமையாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழ் நாட்டில் படிக்கிற மாணவர்கள் [சி.பி.எஸ்.சியில் படிப்போர் நீங்கலாக] அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான, ஒரே சீரான தரத்திலான கல்வி. அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன. இவற்றுள் ஆங்கிலோ இந்தியன்...

எப்படி இருக்கலாம், கல்வி? 4

நான் பள்ளியில் படித்த காலத்தில் குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. வாரத்துக்கு ஒரு பீரியட் மட்டுமே இருக்கும். ஏதாவது கைத்தொழில் கற்றுத்தரும் வகுப்பு அது. என் பள்ளியில் அது கைத்தறி சொல்லித்தரும் வகுப்பு என அறியப்பட்டது. ஓரிரு கைத்தறி இயந்திரங்களும் பள்ளிக்கூடத்தில் இருந்தன.

எப்படி இருக்கலாம், கல்வி? 3

என் தந்தை ஒரு தலைமையாசிரியர். அவரது பள்ளியில்தான் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியராகப்பட்டவர், பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம் இரண்டாவது பேப்பர் எடுப்பார். பள்ளி வளாகத்தில் அவர் ஒரு பெரும் பூச்சாண்டியாக, பிரம்ம ராட்சசனாக அறியப்பட்டவர். ஹெட் மாஸ்டர் வகுப்பு என்றால் பிள்ளைகள் அலறுவார்கள். அடி, மிரட்டல், கடும் தண்டனைகளால் தன் ஆளுமையை அங்கு அவர் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.

எப்படி இருக்கலாம், கல்வி? 2

பாடப்புத்தகங்களின் அச்சமூட்டும் தன்மை குறித்து சென்ற பகுதியில் சொன்னேன். அதற்கு நிகரான இன்னொரு பிரச்னையாக நான் உணர்ந்தது, அவற்றின் முழுமையின்மை. பாடங்கள்தாம் என்றில்லை. புனைவு நீங்கலாக, எழுதப்படும் எந்த ஒரு விஷயமும் தான் சொல்ல வருவதை முழுமையாக வெளிப்படுத்தாத பட்சத்தில் அது ஓர் இறந்த பிரதியே என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை.

எப்படி இருக்கலாம், கல்வி? 1

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் லட்சணம் எவ்வாறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதற்காக நாலு உதாரணங்கள் எடுத்துப் போடப்போக, நீ ரொம்ப யோக்கியமா, அது ரொம்ப யோக்கியமா, இது ரொம்ப யோக்கியமா என்று நல்லவர்கள் பலர் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா இல்லையா என்பதில் என்னுடைய நிலைபாடு என்ன என்று வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்...

போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!

மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம்...

ரகோத்தமன் பேசுகிறார்

வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு. நேற்று இந்தத் தளத்தின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்தேன். அநாவசியமாக எனக்குத் தோன்றிய Sidebarகளை நீக்கியிருக்கிறேன். அலங்காரங்கள் இல்லாத, இந்த எளிய வடிவம் போதும் என்று கருதுகிறேன். ஆனால் Internet Explorer 6 உபயோகிப்பவர்களுக்கு மட்டும் இதனை வாசிப்பதில் பிரச்னைகள் இருக்கும். அவர்கள் Upgrade செய்துகொள்வதையோ, அல்லது Feed Reader எதிலாவது வாசிப்பதையோ தவிர வேறு வழியில்லை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி