எப்படி இருக்கலாம், கல்வி? 3

என் தந்தை ஒரு தலைமையாசிரியர். அவரது பள்ளியில்தான் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியராகப்பட்டவர், பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம் இரண்டாவது பேப்பர் எடுப்பார். பள்ளி வளாகத்தில் அவர் ஒரு பெரும் பூச்சாண்டியாக, பிரம்ம ராட்சசனாக அறியப்பட்டவர். ஹெட் மாஸ்டர் வகுப்பு என்றால் பிள்ளைகள் அலறுவார்கள். அடி, மிரட்டல், கடும் தண்டனைகளால் தன் ஆளுமையை அங்கு அவர் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.

நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது, என் நல்லூழ் காரணமாக என் தந்தைக்குப் பணி உயர்வில் இட மாற்றம் வந்துவிட்டது. பெரிதாக மகிழ ஒன்றுமில்லை. வீட்டிலும் அப்போது அவர் ஹெட் மாஸ்டராகத்தான் இருந்து வந்தார். நிறைய அடிகள் வாங்கியிருக்கிறேன். என் நினைவு சரியென்றால், நான் படிப்பை விட்டு முற்றிலும் விலகிய பிறகுதான் அவர் எனக்குத் தந்தையாகவே காட்சியளிக்கத் தொடங்கினார்.

பிரச்னை அதுவல்ல. அவர் நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆளுநராக, பிரபுதாஸ் பட்வாரி இருந்தபோது அவார்ட் கொடுத்து போட்டோ எடுத்து வீட்டில் மாட்டியிருந்தது. என்னை மிகவும் பாதித்த புகைப்படம் அது. வீட்டில் எனக்குக் கணிதம், ஆங்கில இலக்கணம் இரண்டும் கற்பித்தவர் அவர்தான். நானே அவரை ஒரு நல்ல ஆசிரியர் என்று சொல்லமாட்டேன். சொல்லித்தருவதில் அவருக்குப் பிரச்னை கிடையாது. மணிக்கணக்கில் உட்கார்ந்து பாடமெடுப்பார்.  ஆனால் பொறுமை சுத்தமாகக் கிடையாது. வெகு சீக்கிரம் கோபம் வந்துவிடும். டெஸ்டுகளில் தவறு செய்தால் போட்டு சாத்திவிடுவார். அவரது குணத்தை அவருக்குக் கீழ் பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களும் பள்ளியில் அப்படியே எடுத்து ஏந்திக்கொண்டார்கள். ஆசிரியர் என்றால் அடிப்பவர். ஆசிரியர் என்றால் திட்டுபவர். ஆசிரியர் என்பவர் முரடர். ஆசிரியர் என்பவர் அணுக முடியாதவர்.

பிள்ளைகள் அச்சத்தில் ஒடுங்கி, கைகட்டி வாய்பொத்தி நிற்பதை ஒழுக்கம் என்று எடுத்துக்கொண்டுவிடக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். வாத்தியார் அடிப்பார் என்று பயந்து வீட்டுப்பாடங்களையும் தேர்வுகளையும் கவனமாகச் செய்வார்கள் என்பதே அவர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. வெகு காலம் கழித்து என் தந்தையிடம் இது பற்றிப் பேசியபோது, அவர் என்னை சுத்தமாக மறுத்துவிட்டார். அடித்தல், மிரட்டல் எல்லாம் ஆசிரியத்துவத்தின் ஓர் அம்சம் என்பதாகவே அவர் அறிந்திருந்தார். உதாரணம் சொல்ல, அவருடைய ஆசிரியர்கள் சிலரது பெயர்களையும் பல சம்பவங்களையும் வரிசைப்படுத்த அவரால் முடிந்தது.

நீ ஒரு நல்ல அப்பா. ஆனால் சுமாரான வாத்தியார்தான் என்று சொல்லிவிட்டேன். அவருக்குத் தாங்கமுடியாத வருத்தம் இருந்திருக்கும். இருந்தாலும் மறைத்துக்கொண்டு என்னை மறுத்தே பேசினார். தான் சந்தேகமில்லாமல் ஒரு நல்ல ஆசிரியர்தான் என்று அடித்துச் சொன்னார். அவரிடம் படித்து, பெரிய ஆள்களான சில பேரை நினைவுகூரவும் செய்தார். எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கொண்டு அவரைச் சீண்ட விரும்பாமல் விட்டுவிட்டேன்.

ஆசிரியர்-மாணவர்கள் உறவு என்பது காலகாலமாக இங்கே பிரச்னைக்குரிய ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. சொல்லிக்கொடுப்பது என்பது மிகுந்த பொறுமையையும் அனுசரணையையும் தியானத்தையும் கோரும் ஒரு விஷயம். எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், என் ஆசிரியர் எனக்கு நண்பர் என்று எந்தப் பள்ளிப்பிள்ளை இங்கே யாரும் சொல்லிக்கொடுக்காமல், சட்டென்று எழுந்து சொல்லும்? நட்புணர்வுடன் போதிக்கப்படாத எதுவும் சரியாக உள்ளே இறங்காது என்பது என் தாழ்மையான கருத்து.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் கல்கியில் சேர்ந்த புதிது. அப்போது கி.ராஜேந்திரன் ஆசிரியர். நான் இருபது வயது சப் எடிட்டர். புதன் கிழமைதோறும் மாலை தலையங்கம் எழுதி எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு வருவார். அது கம்போஸ் ஆகி வந்ததும் சப் எடிட்டரிடம் வரும். ‘எழுதியிருக்கேன், சரியா வந்திருக்கா பாருங்க.. எதாவது திருத்தணும், மாத்தணும்னு தோணிச்சின்னா மாத்திக்குங்க. சாஸ்தியா இருந்திச்சின்னா வெட்டிருங்க’ என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுவார்.

தூக்கிவாரிப் போடும் எனக்கு. வாரப் பத்திரிகை தலையங்கங்களிலேயே கல்கியின் தலையங்கத்துக்கு ஒரு தனிச்சிறப்பான இடம் இருந்த காலம் அது. கிராவின் தலையங்க எழுத்தென்பது புள்ளி வைத்து ஆணி அடித்த மாதிரி இருக்கும். ஒரு வார்த்தை, ஒரு முற்றுப்புள்ளி, கால் புள்ளி கூடக் கூடுதல் குறைச்சலாக இராது. இருபது இருபத்தி ஐந்து வரிகளில் ஒரு பிரச்னை, அது பற்றிய பொதுவான கருத்து, பத்திரிகையின் கருத்து, எது நியாயம், எது அநியாயம் என்கிற தெளிவான அலசல், அம்பு நுனி போன்ற விமரிசனம், முத்தாய்ப்பாக ஒரு கடைசி வரி அனைத்தும் இருக்கும்.

ஐம்பதாண்டு காலத்துக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க பத்திரிகையாளர் அவர். புத்தம் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் ஒரு பயிற்சி நிலை சப் எடிட்டரிடம் ‘சரியா வந்திருக்கா பாருங்க, திருத்தணும்னா திருத்துங்க’ என்று சொல்ல எத்தனை பேருக்கு மனம் வரும்? ஆனால் கிரா சொல்லுவார். உடனே ஒரு குஷி பிறந்து, அவரை அதிசயிக்கச் செய்தே தீர்வது என்று அவரது பிரதியில் என்னால் ஆன மாற்றங்களைச் சேர்த்து எடுத்துச் சென்று காண்பிப்பேன்.

படித்துப் பார்த்துவிட்டு, ‘அட ஆமால்ல.. இது எனக்குத் தோணாம பூட்ச்சே.. ஏன் உங்களாண்ட குடுத்தேன்னு இப்ப புரியுதுங்களா? நல்லா செஞ்சிருக்கிங்க.. வெரி குட்டு.’ என்பார். கிறுகிறுத்துவிடும் எனக்கு. ‘ஆனா இதுல என்ன ஒரு விசயம்னாக்கா.. இதே பிரச்னைய பத்தி மூணு வாரம் முன்ன நாம ஒரு கருத்து சொல்லியிருக்கம். அத பாத்திங்கன்னா..’ என்று மெல்ல ஆரம்பிப்பார். சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பற்றிய முந்தைய தலையங்கங்கள் ஒவ்வொன்றாக எடுத்து என்ன எழுதியிருக்கிறது, ஏன் அப்படி எழுதப்பட்டது என்பதையெல்லாம் பொறுமையாக விளக்குவார். ‘நீங்க நல்லா சார்ப்பா எழுதறிங்க. நிச்சயமா இது பெரிய விசயந்தாங்க. ஆனா பாருங்க.. மக்களுக்கு விசயம் சார்ப்பா உள்ளாற போவணுமே தவிர வார்த்தைகள் சாஃப்ட்டா இருந்தாத்தான் புடிக்கும். காரமான வார்த்தைங்க மேடைல கேக்கறப்ப நல்லாருக்கும். எழுத்துன்னு வர்றப்ப சாஃப்டா இருக்கறதுதான் மருவாதி. வேஸ்டி கட்னா ஆம்பள, பொடவ கட்னா பொம்பளன்னு இல்லிங்களா? அந்த மாதிரி. உள்ளார நீங்க ஊசிய வெக்கறிங்களா, ஒலக்கைய வெக்கறிங்களான்றது பிரச்னையே இல்லிங்க. மேலுக்கு வாழப்பழம் வெச்சிரணும். புரியுதுங்களா?’

சற்றும் வலிக்காமல், உறுத்தாமல், தோழமை உணர்வு மேலோங்க எனக்கு போதித்த இந்த ஆசிரியரை நான் பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடைகொடுத்த பிறகுதான் கண்டுபிடித்தேன். சந்தேகமில்லாமல் கல்கிதான் என் முதல் பள்ளிக்கூடம். கிராதான் என் முதல் ஆசிரியர். அதற்குமுன் நான் படித்த இடமெல்லாம் வீண் என்று அழுத்தம் திருத்தமாகத் தோன்றிவிட்டது.

இந்தளவுக்குக் கூட வேண்டாம். ஆனால் மாணவர்களை ஐந்தறிவு ஜென்மங்களாகக் கருதாத ஆசிரியர்கள் மிகவும் அவசியம். பள்ளி நாள்களில் மேலே விழும் ஒவ்வொரு பிரம்படியும் நிச்சயமாக எதிர்ப்புணர்வைத்தான் உண்டாக்கும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். எல்லோருக்கும் அப்படியா என்று தெரியாது. என் ஆசிரியர்களை நான் மனமார வெறுத்திருக்கிறேன். வன்முறை அதன் எந்த வடிவத்தில் வந்தாலும் மனிதர்கள் விரும்புவதில்லை. ஒரு குழந்தையைக் கூட, தவறு செய்யும்போது அடிக்காமல் கண்டித்துத் திருத்துவதுதான் சிறந்தது என்பது என் கருத்து. என் பள்ளி நாள்களில் என் தந்தையிடம் ஏராளமாக அடி வாங்கியவன் நான். இன்று என் குழந்தைக்கு ஆறு வயது. அவள் பிறந்த கணம் முதல் இந்த வினாடிவரை கொஞ்சுவது தவிர பிறிதொன்றுக்கு என் கரம் நீண்டதில்லை. அடிக்காமல், கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், அவர்களது தன்மான உணர்வுக்குப் பங்கம் விளைவிக்காமல் நாம் மேற்கொள்ளக்கூடிய திருத்தல் நடவடிக்கைகள், அடித்துத் திருத்துவதைக் காட்டிலும் பல மடங்கு பலனளிக்கக்கூடியது என்பது என் அனுபவம்.

ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லி இப்பகுதியை முடிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகை வேலை நிமித்தம் கல்கத்தா சென்றிருந்தபோது சாந்தி நிகேதனுக்கு ஒருநாள் போயிருந்தேன். அவர்களது பிரசித்தி பெற்ற மரத்தடி வகுப்பு ஒன்றில் அமர்ந்திருந்தேன். அது எந்த வகுப்பு என்று சட்டென்று இப்போது மறந்துவிட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற ஒரு பீரியடில் ஆசிரியருக்கும் [அவர் ஒரு பெண்மணி] மாணவர்களுக்கும் ஒரு விவாதம் நிகழ்ந்தது. [உயிரியல் பாடம் என்று நினைவு.] பேச்சு ஒருவார்த்தையும் எனக்குப் புரியவில்லை. முழுக்க முழுக்க வங்காள மொழி. ஆனால் மாணவர்கள் ரவுண்டு கட்டி ஆசிரியரை மடக்கி மடக்கித் தாக்கியதும், அவர் சற்றும் சளைக்காமல் சிரித்த முகத்துடன் அத்தனை பேரையும் சமாளித்ததையும் செல்லமாக ஒருவரையொருவர் சாடிக்கொண்டதையும் வகுப்பு முடிந்த கணத்தில் சட்டென்று அத்தனை மாணவர்களும் எழுந்து ஆசிரியருக்குக் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னதையும் இன்றுவரை என்னால் மறக்கமுடியவில்லை.

பாடப்புத்தகங்களால் சாதிக்கமுடியாத பலவற்றை ஒரு நல்ல ஆசிரியர் சாதித்துக்காட்ட முடியும். தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களுக்கு முதற்கண் தேவை, பல கி. ராஜேந்திரன்கள்.

[தொடரும்]

பி.கு: அடுத்த ஒரு சில தினங்களுக்கு எனக்கு இணையத்தொடர்பு எப்போதாவதுதான் கிட்டும். கட்டுரைப் பகுதிகளை ஷெட்யூல் செய்திருக்கிறேன். அவை பிரசுரமாவதில் சிக்கல் இருக்காது. ஆனால் கமெண்ட்களைப் பார்த்து பிரசுரிப்பதில் தாமதம் இருக்கலாம். பொறுத்துக்கொள்ளுங்கள்.

Share

23 comments

 • Fantasitc flow Para,

  Try to push this information thro major periodicals of Tamilnadu as well as in all india magazines. Create a kind of discussions.

  Also please try to bring out books that will be useful to the children in understanding the subjects

  Again really a fine article and all the very best

  B K Ramachandran

 • Can I add my two cents worth here?
  I fully agree and endorse your views. It is disease for elders and teachers especially,not to accept other’s views how ever correct they might be.There are two incidents I would like to relate.
  I studied mechanical engineering during 68-72.In my final year my lecturer committed a serious error in teaching an important subject.
  I brought this to his notice and he wanted me to meet him later in his retiring room after class hours. When I went to meet him, he along with his colleagues looked upon me as if i were his enemy.When I explained him why and how he was wrong his ego would not accept it.He suggested that if i had known it I ought have kept quiet. I told him that the mistake was very serious and if some student were to repeat that in a campus interview it could have cost him his job and hence future. I was a bright student and to my bad luck the same lecturer came as my internal assessor, You guessed it right. I was failed in my exam.So much for the decency and morality of teachers.
  2.My son too studied up to B tech in one of the finest colleges in Chennai. He then proceeded to USA to pursue his Masters.Within the first few months, all he had to say was all these years back in India it was never a learning process and only there the teacher student relationship existed in the true sense.He said, his professor mentioned that if he found a student dozing in his class, he felt that he not him preparation well and went back to his chamber to understand how to teach his students.
  This is the kind of system all of us have come through.
  Regards

 • பள்ளி ஆசிரியர் – உங்கள் தந்தை
  பதிப்பக ஆசிரியர் – நீங்கள்

  வாரிசு அரசியலில் இது புதுவிதம். 🙁 🙂

 • நன்று…….

  எனக்கு என் பள்ளிக்கூட ஞாபகம் நெறைய இருக்கு சார்.
  வாங்கன அடியுந்தான் காதுல கடுக்கன்(கிள்றது) போடறது. நீட்டு மூங்கில் கோளால அடிச்சது, வெளியில முட்டி போட வச்சது. … இன்னும் நெறைய

  அது மாதிரி இந்த வாத்தியாருங்க பண்ற இன்னொரு மட்டமான கொடும என்னன்னா பார்ஷியாலிட்டி பாக்கறது. நல்லா படிக்கறவன் தப்பே பண்ண மாட்டான். படிக்காத பையன் சும்மா பேசனா கூட அதுக்கு ஆயிரத்தெட்டு குத்தம் கண்டு புடிப்பாங்க. நல்லா படிக்கறவன எதுக்கு எடுத்தாலும் தூக்கிவிட்டு பேசறது. அதே மத்தவன் எதாவது பதில் சொன்னா கூடம் அத நக்கல் பண்றது. அதுமாதிரி முன்னாடி உக்காறவன் எல்லாம் நல்லா பையனாம். கடைசியா உட்காந்து இருக்கறவன் எல்லாம் கெட்ட பையனாம். இந்து எந்த மேல்நாட்டு அறிஞர் அவுங்களுக்கு சொன்னதுன்னு தெரியல.

  ஆனாஎனக்கு ரொம்ப புடிச்சது வசந்தா டீச்சர்தான், அடிக்கவே மாட்டாங்க. பசங்க(எங்க) போக்குலே பேசி திருத்துவாங்க. நான் அவுங்க சப்ஜெக்ட்ல அதிக மார்க் எடுத்ததா ஞாபகம்.

 • என் தோழி ஹாஸ்டலில் படித்து வந்தாள். அவளைப் பார்க்க ஆண்டுக்கு ஒருமுறைதான் அவள் பாட்டி வருவார். ஆசிரியர்கள், வார்டன்களைப் பார்த்து, ‘உங்க பொறுப்புலதான் புள்ளைகளை விட்டிருக்கேன். தாய், தகப்பன் இல்லாத புள்ளைங்க. நல்லா வரணும். என்ன அடிச்சாலும் நான் ஏன்னு கேட்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். இதைக் கேட்டவுடன் ஆசிரியர்களுக்கு குஷி அதிகமாகிவிடும்!

  பொதுவாக மாணவர்களாக இருக்கும்போது ஆசிரியர் அடிப்பது, திட்டுவது குறித்து அனைவருமே வருத்தப்படுகிறோம். ஆனால் வளர்ந்த பிறகு அந்த மனநிலை பெரும்பாலானவர்களுக்கு மாறிவிடுகிறது. ‘என் ஆசிரியர் அடித்ததால்தான் நான் நல்ல நிலைக்கு வந்திருக்கேன். ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு எங்களால சமாளிக்க முடியலை. ஐம்பது குழந்தைகளை எப்படிச் சமாளிப்பாங்க? நல்லா அடிக்கட்டும்’ என்று சொல்கிறார்கள்.

  அதே போல ஆசிரியர்களும் தாங்கள் குழந்தகளின் நலனுக்காகவே அடிப்பதாக நம்புகிறார்கள். நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓர் ஆசிரியை, பையில் ஐயோடெக்ஸ் வைத்திருப்பாராம். குழந்தைகளை அடித்துவிட்டு, மருந்தைத் தடவி விடுவாராம்! என்ன ஒரு கொடுமை!

  முதலில் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். சொல்லால், தடியால் அடிப்பதைத் தடை செய்ய வேண்டும். குழந்தைகளை நேசிப்பவர்கள்தான் ஆசிரியர் பணிக்கு வர வேண்டும்.

  மனநல மருத்துவரிடம் வரும் பெரும்பாலான குழந்தைகள், ‘இரவில் அடிக்காதீங்க மிஸ்’ என்று அழுவதாகவும் பள்ளிக்குச் செல்ல அடம்பிடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

  உணவு, உடை, பள்ளி என்று பார்த்துப் பார்த்து குழந்தைகளை நாகரீகமாக வளர்க்க விரும்பும் பெற்றோர், அடிக்கும் விஷயத்தில் மட்டும் இன்னும் காட்டுமிராண்டித் தனமாகவே இருக்கிறார்கள்.

 • ‘எழுதியிருக்கேன், சரியா வந்திருக்கா பாருங்க.. எதாவது திருத்தணும், மாத்தணும்னு தோணிச்சின்னா மாத்திக்குங்க. சாஸ்தியா இருந்திச்சின்னா வெட்டிருங்க.’

  இதையேதான் என்னிடமும் சொல்லியிருக்கிறார். மேட்டரில் ஏதாவது பிரச்னை என்றால், ‘இதை இப்படிச் செய்யக்கூடாது. இப்ப ஒண்ணும் பண்ண வேண்டாம். அடுத்த தடவை கவனமா இருக்கணும்’ என்பார். ராஜேந்திரன் சாரைப் போல இன்னோர் ஆசிரியர் இனிமேல் கிடைப்பது சந்தேகம்தான்.

 • “இன்று என் குழந்தைக்கு ஆறு வயது. அவள் பிறந்த கணம் முதல் இந்த வினாடிவரை கொஞ்சுவது தவிர பிறிதொன்றுக்கு என் கரம் நீண்டதில்லை. அடிக்காமல், கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், அவர்களது தன்மான உணர்வுக்குப் பங்கம் விளைவிக்காமல் நாம் மேற்கொள்ளக்கூடிய திருத்தல் நடவடிக்கைகள், அடித்துத் திருத்துவதைக் காட்டிலும் பல மடங்கு பலனளிக்கக்கூடியது என்பது என் அனுபவம்”

  Excellent Pa.Ra. every father nad mother should follow the same to their child

 • My brother was an average student in the class; His Class Teacher was usually coming to our street in the evening to take tution to my neighbours chldren;
  One day in the class she canned my brother for not doing his home works;
  In the evening, my Grandma, to whom my brother is very pet, meet the teacher in the evening and scolded her and asked her not to give any more punishment to my brother and added that if he is not studying well it is not the teacher’s botheration and he can look after our family business and instructed the teacher strictly not to beat anymore; The teacher taken this and shown vengence against him and not to ask any questions or to give any home wrk or assignmnts to my brother and this spoils his entire life; Teachers should understand the affection of the parent or grand parents with the child and take it in a good sence and to educate the particular child with more care otherwise this would resulted as what I have stated above;

  Suppamani

 • எளிதில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் உரைநடை, தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லுதல் மற்றும் தீர்க்கமான சிந்தனை. அருமை..அருமை..இது போன்ற தரமான கட்டுரையை என்னை படிக்க தூண்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,பாராட்டுக்கள்…

 • நீங்கள் படிப்பை மிகவும் romanticize செய்கிறீர்கள்.என்ன தான் நல்ல குரு கிடைத்தாலும் அனைவரும் சச்சின் ஆகவோ ராமனுஜம் ஆகவோ முடியாது.அது ஆசிரியர்கள் கையில் இல்லை. ஆசிரியர்கள் பல டொசன் மாணவ மாணவியர்க்கு கல்வியை அறிமுக படுத்துகிறார்கள்.ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியம்.கிரா பலருக்கு அடிப்படையை போதிக்கவில்லை.விஷயம் தெரிந்த சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டார்.
  நல்ல தந்தை ஆனால் குறையான வாத்தியார் எனபது சாத்தியமில்லாத ஒன்று.
  வன்முறை தவறு.அதில் மாற்று கருத்து இல்லை.அதற்காக கண்டிப்பே இல்லாமல் கண்ணே மணியே என்றால் ஒன்றும் ஏறாது
  துப்பாக்கி சுடும் வீரனுக்கும் ,அறுவை சிகிச்சை செய்யும்/கற்று கொள்ளும் மருத்துவனும் கண்டிப்பு இல்லாத குருவிடம் வித்தை கற்க இயலாது.
  அனைவரும் சுத்தமாக இருந்தால் கழிப்பறையை பயன்படுத்தினால் போலியோ/பெரியம்மை வராது என்பதை நடைமுறைபடுதுவதை விட அம்மை தடுப்பூசி /கட்டாய சொட்டு மருந்து மூலம் மிக எளிது.
  அவசியமான படிப்பு எது என்பதில் கவனம் செலுத்தினால் ,அதை அனைவர் மண்டைனுள்ளும் ஏற்றினால் அதுவே ஆசிரியனுக்கும் கல்வி முறைக்கும் கிடைத்த வெற்றி.காசு வாங்கி கொண்டு கண்ணே மணியே என்று வருவோர் போவோர்க்கு எல்லாம் driving license கொடுப்பது நல்லதா இல்லை கண்டிப்பாக சொல்லி கொடுத்து கடினமான பரீட்சை வைப்பது நல்லதா.கண்ணே மணியே என்று கொஞ்சும் காதலன் சொல்லி கொடுத்து எந்த காதலியும் வண்டியோட்டவோ,நீச்சலோ கற்று கொள்ள மாட்டார்கள்.பாரதிராஜா பாலச்சந்தரிடம் அடி ,திட்டு வாங்கி கற்று கொள்வதும் ஒரு வகை தான்.

 • It’s unfortunate that you had bad experience when you were at school. Was it the same throughout your 11 or 12 years of school? Mine was quite different.

  I studied in six different schools before I finished my SSLC. I had wonderful teachers who took enormous pains to teach us the right way. I still remember many of their classes. My experience at college was no different. Why, I myself taught in a college for 4 years.

  While the teachers take the same pain for all the students in the class, the perception might have been different for each one of them. In my class of 60 students, not everyone scored equal marks. There are complex reasons for this. I won’t go into those right now.

  Every teacher training includes a subject on educational psychology. It’s upto the teachers to learn well and use them in their classes.

  Please ask your young daughter how her teachers teach? Leave alone the syllabus, but do they make her happy in a good learning environment? You’ll be surprised.

  You’ll also be surprised if you visit many village schools. Where I taught, there was a boy who scored more than 550 out of 600 in SSLC. He was from a village where people hardly went to school. This boy was exceptional even though his pronunciation wasn’t good but he could read and write very well. It was a pleasure to teach such boys.

  My request is not to generalise using your own experience. Even you had a good teacher, at last, in Ki. Rajendran. You were a receptive student then, perhaps.

 • ஆறு வயது குழந்தையை வளர்ப்பதை வைத்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களே.பூச்சி பூச்சி என்று வளர்ப்பதால்
  தான் இன்று சிறுவர்,சிறுமியர் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.ரயிலில் எப்படி ஒன்று,இரண்டு செல்வது என்று சுற்றுலாக்களை வெறுத்து ஒதுக்கும் தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம்
  எது வன்முறை, எது தவறுக்கு தண்டனை என்பதை ஆசிரியர் மாணவன் இருவருக்குமே விளக்க வேண்டுமே தவிர தண்டனையில்லா உலகம் வேண்டும் என்று பாட கூடாது.
  பள்ளிக்கு பட்டாசுகளை எடுத்து வந்ததால் தலைமை ஆசிரியரால் ஒரு பிரம்படி பெற்று அதனால் ஒரு 13 வயது சிறுவன் கொல்கத்தாவில் தற்கொலை செய்து கொண்டான்.ஆயிரக்கணக்கான மாணவர்கள்(படித்த படிக்கின்ற ) அவருக்கு ஆதரவாக இருந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்.
  ஆசிரியரும் பெற்றோரும் திட்டாமல்/செய்த தவறுக்கு தண்டனை அளிக்காமல் வளர்க்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையின் எந்த வயதிலும் ஒரு சுடு சொல் கேட்டாலே இடிந்து போய் விடும் மன நிலை கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.ஏழு வயது வரை என்ன மாதிரி தண்டனை கொடுக்கலாம்,12 வயது வரை என்ன மாதிரி தண்டனை கொடுக்கலாம்,அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று வரைமுறை வேண்டுமே தவிர தண்டனை தருபவன் கொடிய மிருகம் எனபது போல் ஆசிரியர்களையோ பெற்றோர்களையோ உருவக படுத்துவது மிக பெரிய தவறு.

 • நல்லாசிரியர் விருது வாங்கின அப்பாவை குறை கூறுவது வசூல் ராஜா படத்தில் கமல் கேரோம்/கட்டிபுடி வைத்தியம் மூலம் குணப்படுத்துவது தான் சிறந்தது என்று கூறுவது போல் உள்ளது. அது என்ன ஆசிரியர் எடுப்பார் கைப்புள்ளயா சரியா படிக்காத புள்ளை எல்லாம் பாடம் அவங்களுக்கு எடுக்குதுங்க.ஏன் மருத்துவர் எப்படி வைத்தியம் பாக்கணும்,பொறியியல் வல்லுநர் எப்படி வீடு கட்டனும் என்று அறிவுரை கூறுங்களேன்.
  அப்பா அடித்து ஒதைக்காம இருந்திருந்தா நீங்க கல்லூரிய எல்லாம் எட்டி கூட பாத்து இருக்க மாட்டீங்க
  அசோகர் நல்லவர் aurangzeeb கெட்டவன் எனபது உங்க மனசுல ஏறுன ஒன்னு. யாரு நல்லவன் யாரு கெட்டவன் எனபது ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் முறையில் உள்ளது.உங்க ஆசிரியர் சொன்னதால நீங்க அசோகர் கெட்டவர் அக்பர் நல்லவர்னு நம்பிட்டீங்களா.எது உண்மைன்றது உங்களுக்கு முக்கியமில்ல உங்க குழு நினைக்கற மாதிரி அக்பர் கெட்டவர் எனபது தானே ஒட்டுது.சாணக்யன் ஹிட்லர் எல்லாம் நல்லவங்க /உதாரண புருஷர்கள் என்று பேசுகிற /எழுதுகிறவர்களும் உண்டு.அதை எதிர்த்து எழுதுகிறவர்களும் உண்டு.மாணவனுக்கு ரெண்டையும் காட்டி விடணுமே தவிர மனசில ஒருத்தன் கெட்டவன் /இன்னொருத்தன் ரொம்ப நல்லவன் என்று பதிய வைப்பது கடவுள் நம்பிக்கை பதிய வைப்பது மாதிரி.அத விட ஏனோ தானோன்னு பாடம் எடுப்பது எவ்வளோவோ மேல்.
  இல்லாத கடவுள் மேல அவளோ நம்பிக்கை வைத்து கொண்டு வாஸ்து தான் முக்கியம்/ஜாதகம் ரொம்ப முக்கியம் என்று எண்ணி கொண்டு வாத்தியார் வெச்சிருக்கற /பாடம் எடுக்கற முறையை மட்டும் கிண்டல் செய்வது சரியா.

  • பூவண்ணன்: நீங்கள் எனக்குத் தெரிந்த டாக்டர் பூவண்ணன் தானா என்று தெரியவில்லை. கொஞ்சம் கவனித்துப் படித்தீர்களென்றால் நான் என் தந்தையைக் குறை சொல்லவில்லை. ஒரு தலைமுறை ஆசிரியர்களின் கற்பித்தல்முறை எப்படி இருந்தது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன். அது, அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து பிதுரார்ஜித சொத்தாக வந்து சேர்ந்தது என்பதையும் காட்டியிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம், யாரையும் குறை சொல்வதல்ல. நிச்சயமாக அல்ல. மாறாக தனிப்பட்ட முறையில் நான் விரும்பிய கல்வி என்பது எப்படியாக இருந்தது, எனக்கு என்ன கிடைத்தது என்பதை மீள்பார்வை பார்ப்பதன்மூலம் இன்றைய கல்விச் சூழலின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் விவாதங்களை முன்னெடுக்கவும் ஏதாவது உருப்படியான கல்லெடுத்து வைக்கமுடியுமா என்று பார்ப்பதுதான்.

 • நீங்கள் ஒரு நல்ல தகப்பன் அல்ல ஆனால் ஒரு நல்ல வாத்தியார் என்று கூறியிருந்தால் அவர் வருத்த பட மாட்டார் மாறாக மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
  கண்டிப்பு எனபது மிகவும் அவசியமான ஒன்று.8 ,10 வயது வரை அடிக்க கூடாது/கடுமையாக கோவப்பட கூடாது என்று சொல்லுங்கள் ஒத்து கொள்கிறேன்.ஆனால் சாந்தி நிகேதன் போன்ற உடோபியா க்களை உதாரணம் காட்டுவது மிகவும் தவறான ஒன்று.அடிப்படை கல்வி அனைவருக்கும் தெரிந்திருக்க வைக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.அதற்கான வழிமுறைகள் இடத்துக்கு இடம் கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடும்.
  தமிழை விரும்புகிறவனுக்கு கணக்கு யார் சொல்லி கொடுத்தாலும் வேம்பு தான்.கால் பந்து,கிரிகட் வீரனுக்கு படிப்பே கசப்பு தான்.ஆனால் அவனுள்ளும் அடிப்படை விஷயங்களை ஏற்ற வேண்டியது ஆசிரியனின் கடமை.மனைவி/மாமியார் மீதிருக்கும் கோவத்தை மாணவர்கள் மீது காட்டும் ஆசிரியர்களை நான் ஆதரிக்கவில்லை ஆனால் சுந்தரகாண்டம் படத்தில் ஆசிரியன் மாணவியை மணக்க கூடாது என்று விடாபிடியாக கொள்கை வைத்திருக்கும் ஆசிரியனை/கண்டிப்பாக நடந்து கொள்பவன் தான் நல்லாசிரியன் என்று எண்ணுபவனை ஆதரிக்கிறேன்.பாரபட்சம் காட்டாத கோவம் நிறைந்த தலைமை ஆசிரியன் ஒரு வரம்.பள்ளி /கல்லூரி எனபது பிற்கால வாழ்க்கைக்கு நம்மை தயார்படுத்துவது ,அதில் முக்கால்வாசி பாஸ்கள் அனாவசியமாக கோவபடுபவர்களாக தான் இருப்பர்.
  காதலி இப்படி இருந்திருந்தால் ,அவளின் பெற்றோர் இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அனைவரும் ஆசைபடுவர்.ஆனால் உண்மை வேறு.கோவமான வாத்தியாரை சமாளிக்க கற்று கொள்பவன் வாழ்க்கையில் சவால்களை சுலபமாக எதிர் கொள்வான்.
  நம்மிடம் கண்டுபிடிப்புகள் /விக்ஞான வளர்ச்சிகள் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் கல்வி முறையல்ல கலாசாரம்,அதீத கடவுள் மூடநம்பிக்கை.
  இந்தியாவில் இருந்து நோபெல் பரிசு பெற்றவர்களில் அன்னை தெரசா ,சுப்ரமணியம் chandrasekhar திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.அமர்த்ய சென்,கொரானா , வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் மூவரும் வெளிநாட்டு மனைவியை பெற்றவர்கள்.சி வி ராமனின் மருமகள் ஒரு வெளிநாட்டு பெண்.எதையும் கேள்வி கேட்கும் /ஆராயாமல் எதையும் ஏற்று கொள்ளாத மனம்/adventurous /rebellious attitude இருந்தால் தான் ஒருவன் சாதிக்க முடியும்.அதை முளையிலேயே கிள்ளி எரிவது நம் கலாசாரம்.இந்த கொடுமையை புரிவதில் குறைந்த பங்கு வஹிப்பவர் வாத்தியார்களே.மாதா பிதா தெய்வம் அனைவரும் சேர்ந்து நம்மை குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட செய்யும் போது அதை விட்டு வெளியே வர வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்களே.
  நான் கூட தமிழில் மந்திரம் ஓதியிருந்தால் ,என்னையே கூப்பிட்டு பாலபிஷேகம் செய்ய சொல்லியிருந்தால் நாத்திகனாக இல்லாமல் ஆத்திகன் ஆக இருந்திருப்பேன் என்று கூறலாம்.பாரதிராஜாவிடம்/கி ராஜேந்திரனிடம் உதவி இயக்குனர்களாக இருந்த அனைவரும் சிறந்த இயக்குனர்கள்/ஆசிரியர்கள் ஆக முடியாது.தவறு அவர்கள் மேல் அல்ல.

 • அன்புள்ள பாரா,
  கருத்தை மீறி மனதை மாற்றிவிடும் வண்ணம் உள்ள மயக்கு நடையில் எழுதிக் கொண்டு வருவதால் சில விதயங்கள் மழுப்பப் பட்டு படிப்பவரை மயக்கி விடுகின்றன.
  எனக்கு சில கேள்விகள் மட்டும் இருக்கின்றன.
  1.உங்கள் மகளின் சுருங்கி விட்டிருக்கும் உலகத்தைப் போல உங்கள் குழந்தைக் கால உலகம் இருந்ததா?சுமார் எவ்வளவு நேரம் உங்கள் மகள் உங்கள்-அல்லது உங்கள் மனைவி,பெரியவர்கள்- கண் பார்வையில் விலகி இருக்க முடியும்? அதே ஒப்பீட்டில் நீங்கள் குழந்தையாயிருக்கும் போது எவ்வளவு நேரம் உங்கள் பெற்றோரின் பார்வையிலிருந்து விலகி இருந்தீர்கள்?உங்களைக் கண்டிக்க நேர்ந்த தருணங்கள் இதன் பாற் பட்டதா?

  2.சில விதயங்களை வலுக்கட்டாயமாகக் கூட சிறு வயதில் திணித்து விட்டால் அவற்றை மறு நினைவுக்குக் கொண்டு வந்து சிந்திக்கும் வயது வரும் போது அவற்றின் அளப்பரிய மகிழ்வனுபவமும்,பலன்களும் எல்லையற்றது என்பது எனது அனுபவம்.எனது மட்டுமல்ல,அமரர் சுஜாதா கூட ஒரு கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுருந்தார்.சிறுவயதில் பயமுறுத்தலினாலோ,அல்லது அடித்தோ படிக்க வைக்கப் பட்ட பிரபந்தங்களும்,திருக்குறளும் இன்று வாழ்வின் புதிய அர்த்தங்களைத் தருகின்றன.ஜஸ்ட்,அடிப்பது தப்பு என்பதை மட்டும் வலியுறுத்துதால் இது போன்ற இழப்புகள் எத்தனை ஏற்படுகின்றன? நீங்கள் சிறுவயதில் வாங்கிய அடிகளை வாங்காத இக்காலக் குழந்தைகளுக்கான வாழ்க்கைக் கல்வி எத்தகைய புரிதலுடன் இருக்கிறது? கல்வி என்பது வரலாறு,புவியியல்,கணிதம் இவற்றை மட்டும் தெளிவாக’ உறுத்தாத வகையில் கற்றுக் கொள்வது மட்டும்தான் என்று நீங்கள் இன்றும் நம்புகிறீர்களா? அடித்து வளர்க்கப்பட்ட உங்களை விட தழுவி வளர்க்கப்படும் உங்கள் மகள் வீட்டுக்கு வெளியேயான உலகைத் திறமுடனும்,நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?

  சென்ற தலைமுறையின் அடித்த ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புத்தகக் கல்வி மட்டும்தான் என்பது உங்கள் புரிதலா?

  ஜி போஸ்ட் கௌதமும்,நானும் ஐந்தாவது படிக்கும் போது அவர்(ன்) எனக்கு விநியோகித்த அம்புலிமாமா புத்தகங்களுக்காக மாணிக்க வாசகம் பின்னி எடுத்து விட்டார்.கௌதம் என்ன சொல்கிறானோ தெரியவில்லை,ஒரு மாதத்திற்கு முன்னால் இந்தியா சென்ற போது எங்கள் தலைமை ஆசிரியராக இருந்த மாணிக்கவாசகத்தைச் வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன்.

  அவர் பணி ஓய்ந்து,உலகின் பல இடங்களில் இருக்கும் மகன்களிடம் ஐந்து பத்து வருடங்கள் இருந்து விட்ட பின்னரும்,நீங்கள் சென்ற பின்னர் பள்ளி சீரழிந்து விட்டது,செயலாளர் என்ற முறையில் பள்ளிப் பணியை மேற்பார்வையிடும் வேலையையாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்று பள்ளித் தாளாளச் செட்டியார் கேட்டுக் கொண்டதால் இன்றும் அதே சைக்கிளில் பறக்கும் அவரை,பயங்கரமாக அடிப்பார் என்ற ஒரு காரணத்திற்காக மறுதளிக்க வேண்டும் என்று நினைக்கவும் முடியவில்லை!

  அவர் வற்புறுத்திப் படிக்க வைத்த 500 குறட்பாக்களும்,கடைக் கோடிக் கிராமத்தில் இருந்த எட்டாம் வகுப்புச் சிறுவக்கு ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க விடுமுறையில் குழந்தை குட்டிகள் மனைவியைக் கவனிக்காமல்,20 நாட்கள் எங்களுக்குப் பயிற்சியளித்து,ஒலிபரப்பப் பட்ட இராஜராஜ சோழன் நாடகம் வானொலியில் கம்பீரக் குரலாக வெளிப்பட்ட போது ஒரு சிறுவனாக எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு இந்த உலகத்தில் எந்த விலையும் இல்லை!

  அவரது மனைவி,’இப்பவம் ஸ்கூல் ஸ்கூல்னுதான் தம்பி ஓடுராறு..என்று சொன்ன போது எனக்கு விழிகள் கலங்கியது நிஜம்.

  பள்ளியிலிருந்து வந்த அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் திருப்திப் பட்டுக் கொண்டேன்.

  ஆசிரியருக்குத் தேவை அர்ப்பணிப்பு ஒன்றுதான்,அதை அவர் அன்பாலும் வெளிப்படுத்தலாம்,அடித்தும் வெளிப்படுத்தலாம்..ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத மாணவர்களுக்கு அடித்தாவது அதைத் திணிப்பதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு நல்லது..

  மற்றபடி மயக்கும நடையில் போகிறது,இது கூட உங்கள் அப்பா புறங்கையில் அடித்து படிக்கச் சொன்ன ஏதாவது கெழீயீய நட்பில் வாய்த்திருக்கலாம்…தொடருங்கள்!

  அதிஷாவை ஏதாவது திட்டி விட்டீர்களா என்ன,கடந்த நான்கு பதிவுகளிள் இப்படிப் பாராட்டித் தள்ளுகிறார்? :))

 • மற்றபடி பத்ரி எடுத்த கணித வகுப்பையும் வரைபட வகுப்பையும் பதிவில் பதிப்பித்தால் படிக்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.செய்யுங்களேன்,நன்றி!

 • இரண்டு கெட்டான் வயதில் நட்பாக பழகும் ஆசிரியர்/ஆசிரியை மீது காதல்(ஏதோ வொரு காம்ப்ளெக்ஸ்) தான் வரும். தவறு செய்யும் போது காட்டப்படும் கண்டிப்பு தான் அவர்களை ஆசிரியர் என்று வித்தியாசபடுத்தி காட்டும்.படிப்போ/நீச்சலோ /மட்டை பந்தோ அடிப்படை, கண்டிப்பு இல்லாமல் ஏறாது.தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று அழும் சிறுவன்/சிறுமியை வலுக்கட்டாயமாக தான் இறக்க வேண்டும்.அப்படியும் கற்று கொள்ளாமல் இருப்பவர்கள் உண்டு.அவர்களுக்காக பாட்டு பாடி,படிப்படியாக கால் அடி,ஒரு அடி,இரண்டு அடி என்று வித விதமான நீச்சல்குளங்களில் சொல்லி கொடுப்பது மிகவும் கடினமான கால விரயம் ஆகும் காரியம்.

  கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்களை பார்த்து சிரிக்க தோன்றுகிறது எனபது சரியா.அது கல்லூரியில் சேர்வதற்கான முயற்சி இன் முதல் படி.அதற்க்கு அடுத்து அவன் கணிதத்தையே சுவாசிக்க வேண்டிய இடம்,புது theorigalai உருவாக்க வேண்டிய இடம் கல்லூரியும் ,அவன் தேர்ந்தெடுக்கும் வேலையும் தான்.நிறைய பணம் வெறும் வேலை,திருமணம் என்று படிப்பை இரண்டாம் பட்சமாக்கும் தடங்கல்கள் அங்கே வருகின்றன.

  உங்களை போல் நானும் ஒரு ஆசிரியையின் மகன்.என் தந்தை மிகவும் கண்டிப்பானவர்.அவர்கள் கண்டிப்பாக இல்லாமல் இருந்திருந்தால் நான் பள்ளி படிப்பையே முடித்திருக்க மாட்டேன்.இன்றைய தலைமுறை படித்தவர்களின் நடுவே வளர்கிறது.படிப்பால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கிறது.சென்ற தலைமுறைகள் அப்படியல்ல .படிக்காதவர்கள் நிறைந்த சூழலும் ,படிக்காமல் ஆட்டம்,பாட்டம் என்று சுற்றி கொண்டிருபவர்களை குடும்பத்தின் உள்ளும் வெளியிலும் பெருமளவு பார்த்தவர்கள் அவர்கள்.பள்ளிக்கு பிள்ளையை அனுப்பு என்று பெற்றோர்களிடம் மன்றாடிய ஆசிரியர்களும் உண்டு.திருட்டுத்தனமாக தகப்பன் வைத்திருக்கும் சாராயத்தை எடுத்து குடித்த பிள்ளையை தாய் அழுது திருத்துவாளா,சூடு வைத்து திருத்துவாளா.

  தகப்பன் இல்லாமல் தாயிடம் மட்டும் வளரும் குழந்தைகளில் இருந்து வரும் இளைஞர்களில் குற்றம் புரிபவர் சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது எதை காட்டுகிறது.கல்வி மருந்து போல.அதை புகட்ட வேண்டியது அவசியம்.என்ன செய்தாலும் அதன் கசப்பு போகாது.புரிந்து கொள்கிற வயது வரை அதை வற்புறுத்தி தான் பருக வைக்க வேண்டும்

 • Somebody has directed me to ur blog saying it is about equal education (samachcheer kalvi) under debate nowadays. But I encountered a diff subject.

  Teaches shdn’t cane students and shd teach through soft methods and words.

  It is a common view.

  The other view is exacly of ur dad. An English teacher who taught the dreadful English second pp in TN schools meaning grammar and composition

  Mr Paraa, it depends on personality type as to how to receive such harsh pedogogical methods. Some may take it well and be benefited; as ur dad had rightly defended. Some like u wont. I am like u in hating all kinds of harshness in life as well as in pedagogy, and like u, I never used such methods with my own two sons The results are yet to come. What abt u?

  U will hav to wait till she turns out of teenage and stands one day before u: ‘This is the guy I’ve talked abt u. Marriage with him only or death: What do u say ? Come on, dad”

  If such an untoward (????) incident happens, will u qn ur parental method and lament the lapses on ur part? Or, stoically maintain: ‘No..daughter. My method has made u so independent enough to choose a proper guy as ur hubby!’

  I mean, u will hav to wait.

  I said, personality types. This will b endorsed by ur dad. If he s not around, u may have to talk with other teachers. I heard many saying: எல்லாப்பசங்களும் ஒரேமாதிரியில்ல. அடி கொடுக்கத்தான் வேண்டும். வாத்தியார்னா பயம் என்பது தேவை’

  Soft method clicked with u. Wont click with all. Althoug I am lke u in abhorring harsh methods, I wont say ur dad practised wrong methods. I will only say that too will click with some; and with those some, this too wont click.

  I wd suggest u take an impersonal stand on this. U hav written autobiographical views. Beware of urself, Paaraa !

  Read Tiger Mom and write a post on her parental methods. She stirred a controversy and many parents rue the fact they were not like her in bringing up their wards; had they been so, their children wd have done better in life.

  I have come back to where I began:

  To each according to his need; to each according to his ability.

  Real intelligence it is to know our child !

 • I hav read all ur posts on equal education for all. Still they dont touch the main topic others have wanted u to write: Why shd or shdn’t b one and the same syllabus for all ? Hope u will write on that.

  Now, taking all ur posts together, it is clear u r an emotional writer; and u like ur play on the emotions of ur readers. Through such play, u r attempting to build up a consensus for your points of view.

  Why not write some posts w/o being autobiographical ?

  Be that as it may be. Ur thrust in all the posts is on the shoddy way the text books r written in TN. Taking history as an ex, u seem to admire CBSE system.

  Ur point abt the text books in that system esp. history,is not absolutely correct. V can say they r better written only in comparision with state books: that is all. On their own, they r not the best.

  History books in that system completely neglect the contribution of South Indians in freedom struggle. No northern state school boy has ever heard about VOC or Pazhasi Raja or Attingal massacre. For the historians from North India, TN or Kerala is a dark continent to where none has ever ventured before. Not worthy of exploring or recognition.

  One Mr Narayanan, a historian from Madras University held the Chair of Indian Historical Society (dont remember the name correctly), a govt organisation. He resigned the post soon complaining that he found there is complete unwillingness to include the stories of South India esp. freedom struggle in their text books.

  Browse their history books. U will find faults at many places. They r also written in cogulated and ambiguous English, in books on humanities like history and economics.

 • Abt our history text books, here u allege the contents are unsatisfactory and more often than not, distort and prejudice the minds of the children.

  It has been felt by so many before. U r repeating them. But u need to go into why so.

  The stand of historians on historical icons of the past, as u say, Mughals, r not their stand along, thought afresh. It is a stand they received as legacy, sometimes from British historians, who wrote history mainly to introduce it to the British civils servants coming to India or for the text books in Britain. They naturally picked and chose what they wanted; not what they shd. Our historians found it safe to carry on the legacy.

  Text book historians are pigmies. They cant influence anyone by rewriting history. So, they repeat: If Akbar is great, he is for ever great. If Shivaji is great, he is for ever great.

  Try to explore and if u find, Shivaji indeed had a limited vision and looted, dont say that. U will be put the house of India on fire. Ditto for other changes.

  Within this imposed restrictions on their hands, they have to write the textbooks.

  Original thinking may b different and hurt.

  Not all children go to schools to become original thinkers; and strictly speaking, they need not b so. Society cant afford to have many Paraas. It needs more also rans.

  Children go to schools and then, colleges, to find handsome jobs in later life; and become IAS and IPS officers to run the system. Not to change it.

  So, there is always two sides.

  Ur r attempting to see one side only.

 • I wd like to add a few words abt the diff styles of pedagogy adopted by ur dad for u; and u for ur daughter.

  His was a harsh method objected to by u with these words: நீ ஒரு நல்ல அப்பா. ஆனால் சுமாரான வாத்தியார்தான். Being small children, we hav no choice but to accept parental style imposed on us. By the time we grow up to resent and resist the style, we wd have received it fully and benefited or otherwise. A coercision is implied or obviously employed.

  Ur case with ur dad.

  Now ur case with ur own child.

  I am sure here, coercision is implied. Being a small child, she has no option nor choices to examine and accept. A child shdn’t b given choices czo it will b embarrassed as it has not acquired enough judgemental powers to pice and choose.

  We exploit the situation as parents.

  U hav exploited it just as ur dad has done before with. I mean, ur soft approach with ur child is imposed. She has no choices. How can u b sure it is ideal to her. How can she be sure so. So, it is coerced on her.

  Both approaches – ur dad’s harsh pedagogy and urs own the soft one – was and is imposed on the children, u and ur daughter respectively.

  If ur dad’s is wrong, urs s also wrong. If his is correct, urs s also correct.

  It is a vicious circle from which v cant disentangle. Because, as I said, a child has no choices and shd not be given choices at all, according to child psychologists. So, we cant help imposting our style of pedagogy or parental control on our child.

  My point is that: all of us r guilty in our own way if our method cd not bring out the best in our child. Not guilty if it brings out the best.

  I wish I were ur father’s son.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி