அந்த மரத்தில் நிச்சயமாகப் பேய் இருக்கிறது; தவறியும் கிட்டே போய்விடாதே என்று பாட்டி சொல்லியிருந்தாள். கிட்டே போனால் மட்டும் கடிக்குமா என்று கேட்டதற்கு, ‘தின்றுவிடும்’ என்று பதில் சொன்னாள். பாபுவுக்குச் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு பேயைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது.
பாட்டி கடைக்குக் கிளம்பிப் போன சமயம் அவன் தயங்கித் தயங்கி அந்தப் புளிய மரத்தை நெருங்கினான். கடவுளை வேண்டிக்கொண்டு, ‘பேயே உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன். என்னைக் கடித்துச் சாப்பிடாமல் சும்மா வந்து முகம் காட்டிவிட்டுப் போ’ என்று சொன்னான்.
நல்ல வெயில் நேரம். காற்றே இல்லை என்பதால் சுற்றுப்புறத்தில் இருந்த எந்த மரமும் அசையவேயில்லை. திடீரென்று அந்தப் புளிய மரத்தின் கிளைகள் மட்டும் லேசாக அசைந்தாடத் தொடங்கின. பேய் வருகிறது என்று பாபு நினைத்தான். மீண்டும் கடவுளை நினைத்துக்கொண்டு, ‘நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. பேயைப் பார்க்க மட்டுமே வந்தேன்’ என்று சொன்னான். அசைந்த கிளைகள் சட்டென நின்றன. அச்சமூட்டக்கூடிய அமைதியை அவன் உணர்ந்தான். சொல்லி வைத்தாற் போல அந்தப் புளிய மரத்தைத் தவிர மற்ற அனைத்து மரங்களும் இப்போது அசையத் தொடங்கின. அவனுக்கு மிகவும் நடுக்கமாகிப் போனது. மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பியபோது ஒரு குரல் கேட்டது.
‘பயப்படாத கண்ணு. நான் சைவப் பேய். புளியம்பழம் மட்டும்தான் திம்பேன்.’
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Haha.. பாட்டியோட எக்ஸ் போலருக்கு. அதான் இத்தனை அன்பா பேசிருக்கு.
என்ன இருந்தாலும் பாட்டிக்கு அதுகிட்ட பயம் இருக்கும் தானே
செம .. நானும் அவனைத் தின்னுடுமோன்னு பயந்தேன் . நல்ல வேளை ..புளிக்குழம்பு வச்சு அப்பளம் வச்சு கொடுத்து நட்பாகிவிடலாம் .
HaHa…..
Check
பயப்படாதே கண்ணு
நான் பேலியோ பேய்
பேலியோவுல புளி
சேக்கக்கூடாதாம்
பசிக்குதப்பா
ஒரே ஒரு பன்னீர் டிக்கா
வாங்கித் தாயேன்
பேய்க்கதையிலே காமெடி
சீச் சி இந்த பழம் புளிக்கும், புளியம் பழம்..