ஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு

கடந்த இரு தினங்களாக இந்தத் தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் இருந்துவருகின்றன. தளம் தடை செய்யப்பட்டிருப்பதாக ஓர் அறிவிப்பு காட்டப்பட்டிருக்கும். சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை.

யாராவது நல்ல நண்பர்கள் விளையாடியிருக்கலாம். Hack செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நேற்று ஒருமுறை தளம் காணாமல் போக, கணேஷ் சந்திரா மீட்டுக் கொண்டு வந்தார். சில மணிநேரங்கள் சரியாக இருந்தது. இன்று மீண்டும் காலை முதல் காணோம். இப்போது திரும்ப மீட்கப்பட்டிருக்கிறது.

நிஜமான பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்கப்படும்வரை இந்தக் காணாமல் போகும் விளையாட்டு தொடரக்கூடும். ஒருவேளை இது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாகக் கூட இருக்கலாம். என்னவென்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படும் என்று கணேஷ் சொல்லியிருக்கிறார்.

அதுவரை உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.

Share

11 comments

 • இதற்க்கும் மகரநெடுங்குழையை அழைத்தால் அவர் கோபித்து கொள்வார் அதனால் பாடிகாட் முனீஸ்வரர் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்…

 • //நிஜமான பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்கப்படும்வரை இந்தக் காணாமல் போகும் விளையாட்டு தொடரக்கூடும். ஒருவேளை இது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாகக் கூட இருக்கலாம். என்னவென்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படும் என்று கணேஷ் சொல்லியிருக்கிறார்.//

  பாரா சார்

  நிஜ பிரச்சனை என்னவென்றால் சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் நிறுவி பதிவு நடத்துவது என்பது பில் கேட்ஸ் காலத்து (அதாவது ஹைதர் காலத்து) நடைமுறை

  அதற்கு பதில் வோர்ட்பிரஸ்.காம் தளத்திலேயே உங்கள் பதிவை வைத்து writerpara.net என்ற முகவரியில் இயங்கும் படி செய்யலாம். என்ன வோர்ட்பிரஸுக்கு வருடத்திற்கு பணல் அழ வேண்டும்

  ஆனால் அந்த பதிவில் உங்களால் வார்ப்புருவை திருத்த முடியாது. அப்படி வார்ப்புரு திருத்த வேண்டுமென்றால் மேலும் வோர்ட்பிரஸுக்கு பணம் தர வேண்டும்

  அப்படி இல்லாமல் நீங்கள் .blogspot.com என்ற தளத்தில் உங்கள பதிவை வைத்திருந்தால்
  1. writerpara.net என்ற தளத்திலிருந்து அங்கு redirection முற்றிலும் இலவசம்
  2. வார்ப்புரு திருத்தம் செய்ய பணம் தர வேண்டியதில்லை

  இது முற்றிலும் இலவசம்
  உதாரணங்கள்
  http://www.makkal-sattam.org/
  http://www.parisalkaaran.com/
  http://www.luckylookonline.com/
  http://www.narsim.in/
  இந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், காசு கொடுத்து வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை
  இதில் உள்ள சிறப்பு
  1. முற்றிலும் இலவசம்

  2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட

  எனவே நீங்கள் உடனடியாக .wordpress.com (வார்ப்புரு திருத்தம் செய்ய பணம் தரவேண்டும் + மீள்படுத்த பணம் தரவேண்டும்) அல்லது .blogspot.com (வார்ப்புரு திருத்தம் முற்றிலும் இலவசம் + மீள்படுத்த பணம் முற்றிலும் இலவசம்) மாறுவதே நலம்.

  ஆனால் சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் என்பது
  பணம் செலவும் அதிகம் + பாதுகாப்பு குளறுபடிகள் உண்டு + உங்கள் வழங்கியில் பிரச்சனை என்றால் தளம் தெரியாது போன்ற தலைவலிகளும் உண்டு. சுருங்க சொன்னால் சொ.செ.சூ 🙂

  • டாக்டர் சார்! உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இதெல்லாம் என் புத்திக்கு எட்டா விஷயங்கள். என்ன பிரச்னை வந்தாலும் எனக்குக் கவலையில்லை. கணேஷ் பார்த்துக்கொள்வார். ஒழுங்காக எழுதுகிறேனா, தீர்ந்தது விஷயம்.

 • dr. இங்கேயுமா? வேணாம் விட்டுருங்க.. பிரச்சினை எல்லா இடத்திலேயும் உண்டு.

 • வேறு ஏதேனும் ஒரு தளத்தில் ஒரு நிழல் பதிவை (Mirror) உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள். இதை அங்கே வெட்டி ஒட்டினால் போதும்.

  உங்கள் பதிவு கடத்தப்படுவது, ஒரு வேளை ‘ரா’வின் வேலையாக இருக்குமோ? 🙂

  மாலன்

 • //உங்கள் பதிவு கடத்தப்படுவது, ஒரு வேளை ‘ரா’வின் வேலையாக இருக்குமோ?//

  சேச்சே. அவர் நல்லவர். சாது. அப்புராணி. என் நலன் விரும்பி.தவிரவும் பதிவைக் கடத்துமளவு இணையத் தொழில்நுட்பமெல்லாம் அவருக்குத் தெரியாது என்று நம்புகிறேன். அது சரி நீங்கள் நம் பழைய குமுதம் ஆசிரியர் ராவைத்தானே சொல்கிறீர்கள்?;-)

 • ச்சோசோ…: ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு பிரச்ச்னைகளா தொடர்ந்து வரணும். முதல்ல கால்ல அடிப்பட்டு பெட் ரெஸ்ட். அடுத்து சுகம் பிரம்மாஸ்மி எழுத முடியாமால் ப்ரேக்…அதன்பின் வலைத்தள கோளாறுகள்…ஒரு வேளை பாராவிற்கு யாரோ ‘செக்’ வைத்துவிட்டார்களா? I mean check not cheque…Take care Para sir.

 • ராகவன் சார், வணக்கம். கிழக்கு பதிவகம் பற்றி தெரிந்ததும், கிட்டதட்ட 50 புத்தகங்களை தருவித்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.அருமையான எழுத்து.சில புகைப் படங்களையும் இனைத்து எழுதினால் இன்னும் சுவையாக இருக்குமென் நம்புகிறேன்.

  என்றும் உங்கள் ரசிகன்
  விஜய்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி