தொடர்

கணை ஏவு காலம் – புதிய தொடர்

இந்து தமிழ் திசை நாளிதழில் கணை ஏவு காலம் என்ற புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறேன். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே தொடங்கியிருக்கும் போரினை முன்வைத்து இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் நவீன கால வரலாற்றைப் பேசுகிற தொடர் இது. தினமும் வெளியாகும்.

2004ம் ஆண்டு முதல் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் வரலாற்றைப் பேசும் ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடரை எழுதினேன். இரண்டாண்டு காலம் வெளியான அத்தொடர், இரண்டாயிரமாவது ஆண்டு வரையிலான பிரச்னைகளை அலசி ஆராய்ந்தது. கணை ஏவு காலம் அவ்வகையில் நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகம்.

கணை ஏவு காலத்தை இந்து தமிழ் திசையின் இணையத்தளத்திலும் வாசிக்கலாம். இந்தப் பக்கத்தைப் பின் தொடர்ந்தால் அது சாத்தியம்.

நிலமெல்லாம் ரத்தம் அச்சுப் பிரதி
நிலமெல்லாம் ரத்தம் கிண்டில் மின்நூல்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி