Tagஇந்து தமிழ் திசை

இந்த வருடம் இரண்டு புத்தகங்கள்

2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து...

கணை ஏவு காலம் – புத்தக முகப்பு

கணை ஏவு காலம் புத்தகமாக வெளிவருகிறது. தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகத்தையும் வெளியிடுகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் வெளியாகும். விலை ரூ. 230. நூலின் அட்டைப்படத்தினை இன்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே. அசோகன் வெளியிட்டார். இன்றுவரை கனவாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சுதந்தர பாலஸ்தீன் என்கிற கருத்தாக்கம் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் விதத்தில்...

கணை ஏவு காலம்: இன்றுடன் முற்றும்

இந்து தமிழ் திசையில் கடந்த அறுபது நாள்களாக தினமும் வெளியாகிக்கொண்டிருந்த ‘கணை ஏவு காலம்’ இன்று நிறைவு கண்டது. நடுவே ஆயுத பூஜைக்கு ஒரு நாள், தீபாவளிக்கு ஒருநாள் பத்திரிகை வெளியாகவில்லை. மற்றபடி நாள் தவறாமல் வெளியாகி நிறைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நாள்களில் இதைத் தவிர அநேகமாக வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை. எப்போதும் படிப்பு, எழுத்து என்று இந்தத் தொடரோடு மட்டுமே வாழும்படி...

கணை ஏவு காலம் – புதிய தொடர்

இந்து தமிழ் திசை நாளிதழில் கணை ஏவு காலம் என்ற புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறேன். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே தொடங்கியிருக்கும் போரினை முன்வைத்து இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் நவீன கால வரலாற்றைப் பேசுகிற தொடர் இது. தினமும் வெளியாகும். 2004ம் ஆண்டு முதல் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் வரலாற்றைப் பேசும் ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடரை எழுதினேன். இரண்டாண்டு காலம் வெளியான அத்தொடர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter