புத்தக அறிமுகம் புத்தகம்

கணை ஏவு காலம் – புத்தக முகப்பு

கணை ஏவு காலம் புத்தகமாக வெளிவருகிறது. தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகத்தையும் வெளியிடுகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் வெளியாகும். விலை ரூ. 230.

நூலின் அட்டைப்படத்தினை இன்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே. அசோகன் வெளியிட்டார். இன்றுவரை கனவாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சுதந்தர பாலஸ்தீன் என்கிற கருத்தாக்கம் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் விதத்தில் இம்முகப்பை உருவாக்கியவர் பாலா, சேலம்.

இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி, இருபத்தோறாம் நூற்றாண்டின் இருபத்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்ட பின்பும் அது கனவாகவே நீடித்திருப்பதன் அரசியல் காரணங்களைத்தான் இந்நூல் ஆராய்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சரித்திரத்தை இரண்டாயிரமாவது ஆண்டு வரை விவரித்த ‘நிலமெல்லாம் ரத்த’த்தின் இரண்டாம் பாகம் இந்நூல்.

நன்றி அசோகன் / இந்து தமிழ் திசை / பாலா, சேலம்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி