இந்து தமிழ் திசையில் கடந்த அறுபது நாள்களாக தினமும் வெளியாகிக்கொண்டிருந்த ‘கணை ஏவு காலம்’ இன்று நிறைவு கண்டது. நடுவே ஆயுத பூஜைக்கு ஒரு நாள், தீபாவளிக்கு ஒருநாள் பத்திரிகை வெளியாகவில்லை. மற்றபடி நாள் தவறாமல் வெளியாகி நிறைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நாள்களில் இதைத் தவிர அநேகமாக வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை. எப்போதும் படிப்பு, எழுத்து என்று இந்தத் தொடரோடு மட்டுமே வாழும்படி...
எங்கு செல்லும் இந்த யுத்தம்?
இருபது நிமிடங்களில் ஐயாயிரம் ஏவுகணைகள் என்பதைக் கண்ணால் அல்ல; மனக்கண்ணால் கூட முழுதாகப் பார்த்து முடிக்க முடியாது. அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலின் காஸா பகுதியில் இருந்து (அது ஹமாஸின் அதிகார வரம்புக்கு உட்பட்ட, முஸ்லிம்களின் பிராந்தியம்.) சீறிப் பாய்ந்த இந்த ஏவுகணைகள் இஸ்ரேலிய ராணுவத் துருப்புகளைக் குறி வைத்து அனுப்பப்பட்டதாகப் பொதுவில் சொல்லப்பட்டாலும் இந்த நூற்றாண்டு காலப் பகையின் தற்கால சாட்சியாக...
நிலமெல்லாம் ரத்தம் – வெற்றிமாறன் – வெப் சீரீஸ் விவகாரம்
இயக்குநர் வெற்றிமாறன், ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் அல்லது படம் தயாரிப்பதாகவும் இயக்குநர் அமீர் அதில் நடிப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. நெடு நாள்களுக்கு முன்னரே இச்செய்தி வந்திருக்க வேண்டும். நான் கவனிக்கவில்லை. நேற்று தற்செயலாக கண்ணன் பிரபு என்ற வாசக நண்பர் இதனைச் சுட்டிக்காட்டி, உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பதில் சொன்னேன். ஃபேஸ்புக்கில் இதனை ஒரு...