கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி

எங்கள் அலுவலகத்தில் கீழ்க்கண்ட இரண்டு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்.

 

1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator)

வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல்.

தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 – 12,000 (தகுதிக்கேற்ப) + இதரப் படிகள்.

2. இணைய மார்க்கெட்டிங் + விற்பனை பிரதிநிதி (Online Marketing & Sales Executive)

வேலை: இணையத்தளங்கள் மற்றும் கூகிள் வாயிலாக விளம்பரம் செய்தல்; ட்விட்டர், ஃபேஸ்புக், கூகிள் பஸ், வலைப்பதிவு, பிற சோஷியல் மீடியா நெட்வொர்க் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தல்; கிழக்கு பதிப்பகத்தின் இணைய வர்த்தகத்தை நிர்வகித்தல்.

தகுதி: ஏதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். புத்தகம் படிப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. கணினியை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். இணைய நுட்பங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 (தகுதிக்கேற்ப)

தொடர்புக்கு: 9500045611 / haranprasanna@gmail.com

 

Share

11 comments

  • தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கூறி ஒரு வேலைவாய்ப்பைக் காண மகிழ்ச்சி 🙂

    • ஸ்ரீனிவாசன்: உங்கள் விண்ணப்பத்தை ஹரன் பிரசன்னாவுக்கு [haranprasanna@gmail.com] உடன் அனுப்புங்கள்.

  • I am a graduate in psychology. My age is 35. I know Tamil writing (even poems, lyric lines, writing stories) and can talk well. I am basically a medical transcriptionist, works from home and also a blogger and handling all social media, such as facebook (see my facebook profile http://www.facebook.com/sasikrishna, twitter profile ttp://twitter.com/sasikrishna). I would like to apply for this job.

    • சசிகுமார்: மேலே கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள் அல்லது போன் செய்து பேசுங்கள்.

  • தலைப்பை பார்த்ததும் சிறிது அதிர்ச்சி, உங்கள் வேலை தான் கிழக்கில் காலியாகி விட்டதோ என்று, நல்ல வேளை……

  • Dear Para,

    I don’t know about the vacancies are still open… I am a graduate in MCOM (1995-1997 batch). but, i never worked as an accountant.. I am in Dubai now & working in admin/Secretary section. Shall i apply for these posts or any other vacancies in future… bcoz i want to come back and settle in India.

    Regards,
    Siva

  • தலைப்பு பயமுறுத்துகிறதே ஐயா. வேலை காலியா “உள்ளது” என்று சொல்லுங்கள், அல்லது வேலை வாய்ப்பு என்று சொல்லுங்கள்.

    நீங்கள் ஒரு சுவாரஸ்யமான எழுத்தாளர். உங்களுக்கு வேலை எப்போதும் காலியாகக் கூடாது.

  • ஐயா, 2011-ஆம் ஆண்டு நான் இலங்கை சென்று வந்தேன். பார்த்த கேட்ட வலிகை ஈழநேசன் இணையதளத்தில் எழுதினேன். அது இலங்கையில் வெளிவரும் உதயன் நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்தது. இதை நூலாக கொண்டுவர விரும்புகிறேன். உங்கள் பதிப்பகத்தில் இதற்கு வெளி இருந்தால் மகிழ்வேன்.
    பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

  • ஐயா, 2011-ஆம் ஆண்டு நான் இலங்கை சென்று வந்தேன். நான் பார்த்த கடைசி ஈழ போரில் பாதிக்கப்பட்டோரிடம் நான் கேட்ட வலியை ஈழநேசன் இணையதளத்தில் எழுதினேன். அது இலங்கையில் வெளிவரும் உதயன் நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்தது. இதை நூலாக கொண்டுவர விரும்புகிறேன். உங்கள் பதிப்பகத்தில் இதற்கு வெளி இருந்தால் மகிழ்வேன்.
    பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

  • எனக்கு தமிழ், ஆங்கிலம் டைப்பிங் நன்றாக தெரியும்,
    18 வருட அனுபவம் உள்ளது. தற்சமயம் 2 வருடமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளியில் புத்தக டைப்பிங் வேலை செய்து வருகிறேன்.
    தங்களுக்கு டைப்பிங் வேலைக்கு ஆள் தேவை எனில், தயவு செய்து எனக்கு வேலை கொடுங்கள்.
    நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி