இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?

ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்‌ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன். வருடம் முழுதும் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த ஒரு தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறேன் (தொடு வர்மம்). மெட்ராஸ் பேப்பரில் எழுதிய உக்ரையீனா புத்தகமாகியிருக்கிறது. உயிர்மையில் எழுதிய வீட்டோடு மாப்பிள்ளை இம்முறை வருகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டு சிறுவர் நாவல்கள் (புதையல் தீவு, ஐஸ் க்ரீம் பூதம்) புத்தகக்காட்சி தினங்களுக்குள் வரலாம். இந்த வருடம் இவ்வளவுதான்.

எண்ணிக்கையெல்லாம் பொருட்டா என்று ஒரு சிறு சாரார் சொல்வார்கள். நம்பி, படுகுழியில் விழுந்துவிட நான் தயாரில்லை. செயல்பட்டுக்கொண்டே இருப்பது ஒன்றுதான் இருப்பின் நியாயம். அது சிறப்பாகவும் அமைந்துவிடுவது, நியாயத்தின் கொண்டையில் சொருகிய பூ. அவ்வளவுதான்.

நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!