யாராவது சோம்பிக் கிடந்தால் என் பாட்டி ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்துவார். ‘திண்டுமலாரி.’ சிறு வயதில் பலமுறை இதனைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அர்த்தம் தெரியாது. இன்று வரையிலுமே தெரியாது. ஆனால் ஒரு திண்டுமலாரி எப்படி இருப்பான்/ள் என்று இப்போது புரிந்துவிட்டது. டிவியில் ஒரு விளம்பரம் பார்க்கிறேன். காப்பி விளம்பரம். வேலைக்காரம்மாள் போன் செய்கிறாள். ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும் மறுநாள் காலை...
விபரீதம் – 2
கீழ்க்கண்ட சாஹித்தியத்தை நேற்று முன் தினம் இரவு இதே நேரம் எழுதினேன். இன்று சன் டிவியில் உதிரிப்பூக்கள் சீரியலுக்கான ட்ரெய்லரில் இது வருகிறது. தொன்மமும் பின்னவீனமும் சந்தமும் சொந்தமும் சங்கமிக்கும் இந்த ராப்பிலக்கியப் படைப்பினைத் தமிழ்கூறும் நல்லுலகின்முன் சமர்ப்பிப்பதில் சொல்லொணா ஆனந்தமடைகிறேன். [யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தனிமடலில் தெரிவிக்கவும்.]
பாட்டு புஸ்தகம்
அடுத்த சனிக்கிழமை மாலை நிகழவிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையோடு சேர்த்து பாட்டு புஸ்தகம் கிடைக்கும் என்று இன்று தெரியவந்தது. இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. முன்னொரு காலத்தில் என்னிடமே ஏராளமான பாட்டு புஸ்தகங்கள் இருந்தன. அட்டை என்று தனியாக இருக்காது. மட்டரக க்ரீமோ பேப்பரில் நடுவில் பின் அடித்து பிளாட்பாரத்தில்...
மதனசுந்தர ஜவ்வாது பாகவதர்
அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு...
கனகவேல் காக்க
கனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்ஷன்...
ஒரு முக்கியமான புத்தகம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...