கீழ்க்கண்ட சாஹித்தியத்தை நேற்று முன் தினம் இரவு இதே நேரம் எழுதினேன். இன்று சன் டிவியில் உதிரிப்பூக்கள் சீரியலுக்கான ட்ரெய்லரில் இது வருகிறது. தொன்மமும் பின்னவீனமும் சந்தமும் சொந்தமும் சங்கமிக்கும் இந்த ராப்பிலக்கியப் படைப்பினைத் தமிழ்கூறும் நல்லுலகின்முன் சமர்ப்பிப்பதில் சொல்லொணா ஆனந்தமடைகிறேன். [யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தனிமடலில் தெரிவிக்கவும்.]
மானங்கெட்ட மானத்துக்கு
வெக்கமில்ல ரோசமில்ல,
புயலடிக்குது வெயிலடிக்குது
வெக்க வந்து வேத்து ஊத்துது;
வெள்ளம் வருது பள்ளம் வருது
பள்ள ரோட்ல பஸ்ஸு வருது;
பஸ்ஸு நிறைய கும்பல் வருது,
கும்பலுக்குள்ள குய்யோ முய்யோ;
சத்தம் வருது ரத்தம் வருது,
கண்டக்டரு விசிலடிக்கறான்
காலேஜ் பய கல்லடிக்கறான்;
ஸ்டிரைக்கு வருது நோட்டீஸ் வருது
அப்பங்காரன் அலுத்துக்கறான்
ஆத்தாக்காரி சலிச்சிக்கறா;
கீர வெல ஏறிப்போச்சு சோறு வெல ஏறிப்போச்சு;
ஈரத்துணிய மடிச்சிப் போட்டு
இழுத்துப் போத்தி படுத்துக்கடா
இளிச்சவாயிப் பயலுவளா…
வாயக்கட்டி வயித்த கட்டி
வண்ணாஞ்சாலு துணியக்கட்டி;
ஏற கட்டி எருவ கொட்டி
எருமமாடு உழவு கட்டி;
பேர கட்டி பெரும கட்டி
பெருமா கோயிலு உண்டகட்டி;
கார வேட்டி மடிச்சிக்கட்டி
தல தெரிக்க
ஓட்றாம்பாரு. ஓட்றாம்பாரு. ஓட்றாம்பாரு.
காதலுக்கு கண்ணு இல்ல
கண்ணிருந்தா பொண்ணு இல்ல
பொண்ணிருந்தா பையன் இல்ல
ரெண்டும் இருந்தா வில்லன் உண்டு
வில்லனுக்கு தில்லு உண்டு
தில்லுதொர பேர சொன்னா
கிடுகிடுக்கும் சைதாப்பேட்ட.
அக்காகாரி அலுத்துக்கறா
தங்கச்சிக்காரி சலிச்சிக்கறா
அத்தக்காரி மொறச்சிக்கறா
அம்மாக்காரி கரிச்சிக்கிறா,
மாமங்காரன் சித்தப்பங்காரன்
பெரியப்பங்காரன் பெரியம்மாக்காரி,
சாதி சனம் மொத்தம் சேந்து
உருமியடிச்சி கூத்துக்கட்டி,
பேரு சொல்லி பெட்டு கட்டி
பெரும பேசி உரிமை பேசி,
கார பேந்த செவுத்துக்கெல்லாம்
கலரு பூசி லைட்டு போட்டு,
ஊரக்கூட்டி ஒரக்க சொன்னா…
உதிரிப்பூக்கள் பாருங்கப்பூ…..
பாடலை மிக அருமையாய் பாடி இருக்கிறார் பாடியவர் அதற்கேற்ற காட்சி சேர்ப்பும் அருமை.
why this கொல வெறி! கொல வெறி! கொல வெறி!
நேத்து கேட்டேன். பார்த்தேன். நன்றாகயிருந்தது.
கதை,வசனம்,வரைகலை,இப்போ கவிதை அடுத்து என்ன இசையமைப்பா? ஜமாயுங்கள்..
கலகிபையிங்
நல்லா வந்திருக்கு பாரா. உங்களை எப்படி உபயோகப்படுத்திக்கணும்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. 🙂 அது முக்கியம்.
சூப்பர்.
Et tu, Paa.Raa?…Then fall Tamil language!
மிகவும் வருந்துகிறேன்!
1.நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
2.எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க!
3.அம்மி கொத்த சிற்பி எதற்கு?
4.கால்வாயில் விழுந்த காஷ்மீர் ஆப்பிள்
மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்!
ஏதோ சானல் மாற்றும் போது கேட்டேன், கேட்க நன்றாகத்தான் இருந்தது..:-). நீங்க எழுதியதுன்னு இப்போத்தான் தெரிந்தது…:-):-)
அம்மி கொத்த சிற்பி எதற்கு?
“y this கொலை வெறி” (யைவிட) இது நல்லாருக்கே !