உவேசா முன்னுரைகள் என்ற சிறிய தொகுப்பு நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பதிப்பித்த சில புராதன இலக்கியப் பிரதிகளுக்கு எழுதிய முன்னுரைக் குறிப்புகளைக் கொண்ட நூல் இது. சிறுபாணாற்றுப்படை அதிலொன்று. //சிறுபாணாற்றுப்படை என்பது நக்கீரர் முதலிய கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டு, அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டினுள், மூன்றாவதாக உள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுப் பத்தொன்பது...
சொற்களின் முகங்கள் – ஆவணப் பட விழா
சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் சார்பில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர்கள்-கலைஞர்களைப் பற்றிய ஆவணத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, கிரா, சுரேஷ் குமார இந்திரஜித், ஞானக்கூத்தன் உள்ளிட்ட பல தமிழ் படைப்பாளிகளைக் குறித்த ஆவணப்படங்கள் இந்த விழாவில்...