காவ்யகுமாரி

உயிர்மை இதழில் என் புதிய சிறுகதை காவ்யகுமாரி வெளியாகியுள்ளது.

 

எல்லாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் நடந்து, சென்ற வாரம் திருமணமும் முடிந்துவிட்டது. கஜகஸ்தான் சிட்டிபாபு மூன்று நாள் விடுப்பில் வந்து திருமணத்தை நடத்திவிட்டு, அம்மாவையும் தங்கச்சியையும் பொறுப்போடு பார்த்துக்கொள் என்று மென்பொருள் சங்கருக்கு புத்திமதி சொல்லிவிட்டுத் திரும்பவும் கஜகஸ்தானத்துக்குப் போய்ச் சேர்ந்தார். இங்கே அஷ்டலட்சுமி அம்மாள் தனது புதிய மருமகளான காவ்யகுமாரியை எதிர்கொள்ள ஆயத்தமானார். அவரது கவலையெல்லாம் ஒன்றுதான். மென்பொருள் சங்கர் மணந்துகொண்டு, மருமகளாக்கியிருந்த பெண்ணுக்கும் மத்திய அரசு கோகிலாவுக்கும் ஒரே வயது. இது இன்னும் மாப்பிள்ளை அமையாத தனது இளைய குமாரத்தியை மனத்தளவில் பாதித்துவிட்டால் என்ன செய்வது?

எனவே அவர் ஒரே சொற்றொடரில் மகிழ்ச்சியடைந்து வருத்தப்படும் விதமாகப் பேச ஆரம்பித்தார். ‘பையன் செட்டில் ஆயிட்டான்; இனிமே அவன் பாத்துக்குவான்னு இருந்துட முடியுங்களா?’

 

முழுதும் வாசிக்க இங்கே செல்லவும்.

Share

4 comments

    • காவ்யகுமா…பாத்திரத்ைதை தவறாக நினைக்க இயலாது..ஆம் யதார்த்த மருமகள் …Super Story..

  • இதையே முழுக்கதை என முடிந்திருந்தால் ஒரு அதிநவீனக் குறுங்கதையாக இருந்திருக்கும்.

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me