நேற்றைய கலவரத்துக்கு சாட்சி ஆனவர்களுக்கு ஒரு சொல். அச்சுப் புத்தகம் – கிண்டில் இரண்டையும் நான் சமமாக மதிப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சு நூல்களைக் காட்டிலும் கிண்டில் புத்தகங்களின் விலை ஏன் குறைவாக இருக்கிறது; எதனால் அதில் வாசிப்பது நல்லது என்று என்னைவிட விரிவாக எழுதிய இன்னொரு எழுத்தாளர் இங்கே கிடையாது. கிண்டில் என்பது காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வந்திருக்கும் ஒரு நவீன...
எழுத்தாளர்-வாசகர் உறவு எப்படி இருக்க வேண்டும்?
கணவன் மனைவி உறவினைப் போல. காதலன் காதலி உறவினைப் போல. ஆசிரியர் மாணவர் உறவைப் போல. நண்பர்களைப் போல. கடவுள் பக்தன் உறவு நிகர்த்து. இன்னும் சொல்லலாம். அவரவர் உவப்பு. அவரவர் மனப்பாங்கு. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு வாசகரின் கமெண்ட்டுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து சென்றால் உடனே அதனை ஒரு கொலை பாதகச் செயலாகக் கருதிவிடும் போக்கு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது. அதைக் கூடச் சகித்துக்கொள்ளலாம். கேவலம் கொலை...