அழைப்பான்களின் காலம்

வாட்சப், ஃபேஸ்புக் மெசஞ்சர், டெலிகிராம் மற்றும் கட்டண மெசேஜ் சேவைகளை எதற்காக, எவ்வளவு பயன்படுத்துகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். வாட்சப் வந்த பின்பு கட்டண மெசேஜ் அனுப்பும் வழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது என் மனைவிக்கு மட்டும் சாதாரண மெசேஜ் அனுப்புவேன். அதுவும் இருவருடையதும் ஐபோன் என்பதால் காசில்லா ஐமெசேஜ். மற்றபடி வங்கியில் இருந்து,… Read More »அழைப்பான்களின் காலம்

ரிப்

முன்பெல்லாம் நாளிதழ்களில் என்ன வெளியாகியிருந்தாலும், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் வழக்கம் உண்டு. இதே போலத் தான் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் எதையும் மறு வினா இன்றி நம்பக்கூடிய ஒரு பெரும் கூட்டம் இருந்தது. சினிமா செய்திகள், வதந்திகளைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையில் வெளியானாலுமே அது சரிதான் என்று நினைப்பார்கள்.… Read More »ரிப்

கீரை வாங்கும் கலை

நானும் எவ்வளவோ வருடங்களாக வீட்டுப் புருஷனாக இருக்கிறேன். இன்று வரை ஒரு கீரைக் கட்டை சரியாகப் பார்த்து வாங்கத் தெரிந்ததில்லை. இத்தனைக்கும் பேலியோவில் இருப்பவன் என்பதால் கீரை என்னுடைய மிக முக்கியமான உணவும்கூட. ஒவ்வொரு முறை கீரை வாங்கச் செல்லும்போதும் எனக்கு இரண்டு பிரச்னைகள் வரும். 1. எது எந்தக் கீரை? 2. இந்தக் கீரை… Read More »கீரை வாங்கும் கலை

திண்டுமலாரி

யாராவது சோம்பிக் கிடந்தால் என் பாட்டி ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்துவார். ‘திண்டுமலாரி.’ சிறு வயதில் பலமுறை இதனைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அர்த்தம் தெரியாது. இன்று வரையிலுமே தெரியாது. ஆனால் ஒரு திண்டுமலாரி எப்படி இருப்பான்/ள் என்று இப்போது புரிந்துவிட்டது. டிவியில் ஒரு விளம்பரம் பார்க்கிறேன். காப்பி விளம்பரம். வேலைக்காரம்மாள் போன் செய்கிறாள். ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும்… Read More »திண்டுமலாரி

மால்கள்

சென்னையில் நான் அறிந்த முதல் மால் என்பது மூர் மார்க்கெட். அங்குதான் ஒரு காலத்தில் எல்லாமே கிடைக்கும். தவிர எல்லாம் மலிவாகவும் கிடைக்கும். பயன்படுத்திய பாய், பெட்ஷீட்டுகளைக் கூட மூர் மார்க்கெட்டில் வாங்க முடியும். எப்படிப் பழைய புத்தகங்களை முடியுமோ அப்படி. நவீனத்துவ காலத்தின் முதல் மால் என ஸ்பென்சர் மால் அறிமுகமானபோது ஓரிரு முறை… Read More »மால்கள்